கஷ்டங்கள் நீங்கி நலம் பல சேரும் குரு ஆராதனை! | Guru aradhana

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (21/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (21/12/2018)

கஷ்டங்கள் நீங்கி நலம் பல சேரும் குரு ஆராதனை!

வாழும் காலத்திலேயே பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி அருள் செய்தவரான சுவாமிகளின்  அதிஷ்டானத்தை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும்.

திருவாரூர் மாவட்டம், அரசவனங்காட்டில் இன்று 21.12.2018 தொடங்கி ஏழு நாள்களுக்கு நாகப்பட்டினம் பெரியவா என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும்  ஸ்ரீஸ்ரீ ஸ்வயம்பிரகாசேந்திர சுவாமிகளின் அதிஷ்டானத்தில் சுவாமிகளது 100 வது ஆராதனை மகோத்ஸவம் நடைபெறுகிறது. 

 ஆராதனை


ஸித்தியடைந்த ஞானிகளுடைய அனுக்ரஹ சக்தியில் ஒரு பகுதி, அவர்கள் தேகத்தைப் புதைத்த இடத்தில் இந்த அனுக்ரஹ சக்தி ஊன்றி நின்று, பக்தர்களுக்குப் அருள்பாலிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. அரசவனங்காட்டில் ஒன்றல்ல மூன்று ஞானிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.

வாழும் காலத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியவர்களான ஸ்ரீநல்லூர் சுவாமிகள், ஸ்ரீஸ்ரீ ஸ்வயம்பிரகாசேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீஅச்சுதானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் அதிஷ்டானங்கள் உள்ளன. 
ஸ்ரீவித்யா உபாசகரான ஸ்ரீஸ்ரீ ஸ்வ்யம்பிரகாசேந்திர ஸ்வாமிகள்  ஸ்ரீவித்யா பூஜா விதானங்களை எழுதி காஞ்சி மடத்துக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. 

 

 ஆராதனை

 

வாழும் காலத்திலேயே பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி அருள் செய்தவரான சுவாமிகளின் அதிஷ்டானத்தை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும் என்றும் தொழிலிலிருந்து வரும் தேக்க நிலை மாறும் என்றும், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். 

முதல் ஸ்ரீமத் பாகவத சப்தாகமம் தொடங்குகிறது. 25.12.2018 அன்று ஸ்ரீ நவாவர்ண பூஜையும், 26.12.2018 அன்று ஸ்ரீ சண்டி ஹோமமும் நடைபெறுகின்றன. இறுதி நாளான 27.12.2018 அன்று சப்தாகம நிறைவும், அதிஷ்டானத்தில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளன. சுவாமிகளின் சந்நிதானத்தில் நடைபெறும் இந்த  100 வது ஆண்டு மகோத்ஸ்வத்தில் கலந்துகொண்டு பக்தர்கள் குருவருளையும் திருவருளையும் அடையுமாறு ஊர் மக்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க