23-ம் தேதி சக்தி விகடன் நடத்தும் சுயம்வர பார்வதி ஹோமம் - முன்பதிவு செய்வது எப்படி? | Sakthi Vikatan to conduct Swayamvara Parvathi Homam

வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (21/12/2018)

கடைசி தொடர்பு:18:33 (21/12/2018)

23-ம் தேதி சக்தி விகடன் நடத்தும் சுயம்வர பார்வதி ஹோமம் - முன்பதிவு செய்வது எப்படி?

சகல தோஷங்களும் தடைகளும் நீங்கி கல்யாண வரம்பெற விரும்பும் அன்பர்கள் யாவரும் இந்த விசேஷ ஹோமத்தில் கலந்துகொண்டு, இறையருளால் திருமண வரத்தையும் மங்கல வாழ்வையும் பெற்றுச் சிறக்கலாம். 

23-ம் தேதி சக்தி விகடன் நடத்தும் சுயம்வர பார்வதி ஹோமம் - முன்பதிவு செய்வது எப்படி?

`ல்லறமல்லது நல்லறமன்று' என்பது ஆன்றோர் வாக்கு. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் உரிய காலத்தில் திருமணம் செய்துகொண்டு, தான் பிறந்த குடும்பத்துக்கும் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யும்போதுதான் இல்லறம் என்பது நல்லறமாகி புண்ணியம் சேர்க்கிறது.

சக்திவிகடன் நடத்தும் பார்வதி ஹோமம்

முன்பதிவுக்கு: இங்கே க்ளிக் செய்யவும்...

அதனால்தான் `திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்றனர் நம் முன்னோர். ஆனால், திருமணம் என்பது அனைவருக்குமே உரிய காலத்தில் நடைபெறுவதில்லை என்பதையும் நான் கண்கூடாகப் பார்க்கிறோம். 

ஒருவருக்கு பெரிய அளவில் வசதி இல்லை என்றாலும்கூட, அவருக்கு நல்ல இடத்தில் உரிய காலத்தில் திருமணம் நடைபெற்றுவிடுகிறது. ஒருவருக்கு எத்தனைதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் திருமணம் நடைபெறுவதில் தடை தாமதங்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு இறுதிவரை திருமணமே நடைபெறாமலும் போய்விடுகிறது. எத்தனை முயற்சி செய்தாலும் சரியான பெண்ணோ அல்லது பையனோ அமையாமல் திருமணம் தடைப்பட்டு விடுகிறது. 

இதற்கு ஜோதிட ரீதியாகப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஜாதகக் கட்டத்தில் லக்னத்துக்கு அடுத்த வீடான  குடும்ப ஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாவது ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் என்ற சொல்லப்படுகின்ற ஏழாமிடமும் மற்றும் புத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாமிடமும் மற்றும் படுக்கை ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பன்னிரண்டாமிடமும் நன்றாக இருக்கவேண்டும். 

இதற்கும் அவர்களின் தகுதிக்கும் சம்பந்தம் இல்லை. பொருளாதாரம் அதிகம் இருப்பவர்களுக்குக் கூட தங்கள் பிள்ளைகளின் திருமணம் தள்ளிப்போவதைப் பார்க்கின்றோம். ஆனால், ஏழை எளியவர்களுக்கெல்லாம் திருமணம் காலத்தே நடைபெறுவதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

விஷ்ணு - பார்வதி -சிவன்

ஒருவருடைய திருமணம் தடைப்படவோ அல்லது தாமதமாகவோ களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் காரணமாக அமைகின்றன. மேலும் ஜாதகத்தில் குறிப்பிட்ட சில கிரக அமைப்புகளும் திருமணம் நடைபெறுவதில் சில தடைகளை ஏற்படுத்துகின்றன.

களத்திர ஸ்தானம் எனப்படும் 7-ம் இடத்தில் சனி போன்ற பாவ கிரகங்கள் இருப்பது, பாவ கிரகங்களின் பார்வை அந்த இடத்துக்கு ஏற்படுவது, அந்த ஸ்தானத்துக்கு உரிய கிரகம் 6,8,12 ஆகிய இடங்களில் மறைந்திருப்பது திருமணத் தடையை ஏற்படுத்தும்.
அதேபோல் குடும்ப ஸ்தானம் என்று சொல்லப்படும் 2-ம் இடத்தில் சனி, ராகு, கேது இருப்பது, சூரியன் 2-ல் இருப்பது, செவ்வாயும் சனியும் சேர்ந்து 2-ம் இடத்தைப் பார்ப்பது போன்ற அமைப்பு ஜாதகத்தில் இருந்தாலும் திருமணத் தடையை ஏற்படுத்தும். அல்லது திருமணம் நடைபெறுவது தாமதமாகும். 

முக்கியமாக களத்திர காரகன் என்று சொல்லப்படும் சுக்கிரன் நல்ல இடத்தில் அமைந்திருப்பது மிகவும் முக்கியம். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பகை, நீசம் பெற்றிருந்தாலோ அல்லது 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெற்றிருந்தாலும் திருமணத் தடை ஏற்படுத்தும். குடும்ப ஸ்தானத்துக்கு உரிய கிரகம் பகை, நீசம் பெற்றிருந்தாலும், மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் திருமணம் தடைப்படும்.

சிவன் - பார்வதி- விஷ்ணு

முன்பதிவுக்கு: இங்கே க்ளிக் செய்யவும்...

ஒருவரின் ஜாதகத்தில் திருமணத் தடையை ஏற்படுத்தக் கூடிய அனைத்து தோஷங்களும் நீங்கி, திருமண பாக்கியம் கைகூடவும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் அமையவும் அருள்புரியும் பல வழிபாடுகளில் மிகவும் சிறப்பான வழிபாடு சுயம்வர பார்வதி ஹோமம். திருமணத்துக்கு உரிய வயதைக் கடந்தும் திருமணம் நடைபெறாமல் கஷ்டப்படுபவர்கள், சரியான வரன் அமையாமல் கஷ்டப்படுபவர்கள் திருமணத் தடை நீங்கவும், நல்ல வாழ்க்கைத்துணை அமையவும், உரிய வயதில் பொருத்தமான முறையில் திருமணம் கூடிவரவும் சுயம்வர பார்வதி ஹோமம் செய்வது மிகச் சிறந்த பரிகாரமாகும். 

திருமணம் தடைப்படுபவர்களின் நலன் வேண்டி, `சக்தி விகடன்' சார்பில் வரும் 23-ம் தேதி சென்னை குன்றத்தூர் அருள்மிகு மேதாலீஸ்வரர் திருக்கோயிலில் காலை 9 மணி முதல் 3 மணி வரை காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் வழிகாட்டலில், சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது. 

சகல தோஷங்களும் தடைகளும் நீங்கி கல்யாண வரம்பெற விரும்பும் அன்பர்கள் யாவரும் இந்த விசேஷ ஹோமத்தில் கலந்துகொண்டு, இறையருளால் திருமண வரத்தையும் மங்கல வாழ்வையும் பெற்றுச் சிறக்கலாம். 

முன்பதிவுக்கு: இங்கே க்ளிக் செய்யவும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்