வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (27/12/2018)

கடைசி தொடர்பு:14:50 (27/12/2018)

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு! 

பரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை இன்றுடன் நிறைவுபெறுகிறது. இக்கோயிலில், பெண்கள் தரிசிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அங்கு பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

 

ஐயப்பன்

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி  கோயில் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கியது. மண்டல பூஜையை, புதிதாக மேல்சாந்தியாகப் பொறுப்பேற்ற விஷ்ணு நம்பூதிரி தொடங்கிவைத்து, நெய் அபிஷேகம் செய்தார். இதற்கிடையே,  சந்நிதானம் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. தினமும் அதிகாலை 4 மணிக்கு  நடை திறக்கப்பட்டது.

அதிகாலை  4.05 நிர்மால்ய தரிசனம், 4.15 மணிக்கு கணபதி ஹோமம், 7.45 மணி முதல் 12 மணி வரை நெய் அபிஷேகம், பகல் 1 மணிக்கு உச்சி பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு,  6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணி முதல் 10 மணி வரை புஷ்பாபிஷேகம்,

ஐயப்பன்

10.30 மணிக்கு அத்தாழ பூஜை, 10.50-க்கு ஹரிவராஸனம் பாடி,  நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 26-ம் தேதி வரை பூஜைகள் நடைபெற்றன. மேலும், மண்டல பூஜையை முன்னிட்டு பந்தளம் வாழியக் கோயில், குளத்துப் புழா பாலசாஸ்தா கோயில், ஆரியங்காவு ஐயப்பன் கோயில், அச்சன் கோயில் தர்மசாஸ்தா எருமேலி சாஸ்தா கோயில் உள்ளிட்ட இடங்களிலும் பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், தந்திரி பூஜைக்குப் பின்னர்  சந்நிதானத்தின் நடை இன்று இரவு சாத்தப்பட்டு, மண்டல பூஜை நிறைவுபெறுகிறது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கோயிலின் நடை 30-ம் தேதி மாலை திறக்கப்படும்.