வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (29/12/2018)

கடைசி தொடர்பு:13:40 (29/12/2018)

கொல்லிமலையில் பழைமை வாய்ந்த முருகன் கோயில்! - ஓர் ஆண்டு கடந்தும் முடியாத திருப்பணிகள்

வேடுவர்கள் வாழ்ந்த குறிஞ்சி நிலத்தின் இறைவனான முருகன், வேடுவனின் கோலத்திலேயே காட்சி தந்து அருள்பாலிக்கும் திருத்தலம், கொல்லிமலையில் இருக்கும் பழநியாண்டவர் திருக்கோயில். 

முருகன்


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள  இந்தக் கோயிலை சங்ககாலத்தைச் சேர்ந்த  மன்னன் வல்வில் ஓரி கட்டிய சிறப்பை உடையது. வழக்கமாக முருகன் தனது கொடியில்தான் சேவலை கொண்டிருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் மட்டுமே நின்ற வண்ணம் உள்ள முருகன் கையில் சேவல் உள்ளது.

இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு, வேடன் ரூபத்தில் காட்சி கொடுக்கும் பழநியாண்டவரின் சிலைதான். இதை நேருக்கு நேர் நின்று வணங்கினால் வேடனாகவும், வலதுபுறம் இருந்து பார்த்தால் ஆண் தோற்றமும், இடதுபுறம் இருந்து பார்த்தால் பெண் தோற்றமும் தெரியும். அற்புதமான கலைப் படைப்பாக இந்தச் சிற்பம் விளங்குகிறது. இந்தக் கோயிலில் அகத்தியர் வந்து தரிசனம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அருணகிரிநாதரும் இந்தத் தலம் குறித்துப் பாடியுள்ளார். 

முருகன்


இந்தக் கோயிலைப் புனரமைக்கும் பணி கடந்த ஓர் ஆண்டாக நடந்து வருகிறது. கோயிலைச் சுற்றியிருந்த சில பகுதிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாகத் தூண்கள் அமைக்கும் பணிக்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் கொல்லிமலை கைங்கரிய பணிக் குழு ஈடுபட்டுள்ளது. ஓர் ஆண்டு கடந்த பின்னும் குறைந்த அளவிலான பணிகளே முடிக்கப்பட்டுள்ளன. சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலின் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க