கும்பராசிக்காரர்களே வருமானம் உயரும்… வீடு, வாகனம் வாங்குவீர்கள்! 2019 புத்தாண்டு பலன்கள் | Aquarius astrosign predictions and benefits for the new year 2019

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (30/12/2018)

கடைசி தொடர்பு:14:50 (30/12/2018)

கும்பராசிக்காரர்களே வருமானம் உயரும்… வீடு, வாகனம் வாங்குவீர்கள்! 2019 புத்தாண்டு பலன்கள்

உங்களின் ராசிநாதன் சனி பகவான் இந்த ஆண்டு முழுக்க சனி 11 - ம் வீடான லாப ஸ்தானத்தில் இருப்பதால், உங்களின் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும்.

கும்பராசிக்காரர்களே வருமானம் உயரும்… வீடு, வாகனம் வாங்குவீர்கள்! 2019 புத்தாண்டு பலன்கள்

ந்த உதவியை யார் கேட்டாலும், தன்னால் இயன்ற அளவு செய்து தருகின்ற தர்ம சிந்தனையுள்ள ராசிக்காரர் நீங்கள்தான். ஊரின் பொது காரியங்கள், கோயில் விழாக்களில் நீங்கள் முதல் ஆளாக நிற்பதால், உங்களை 'கும்பாபிஷேக ராசிக்காரர்கள்' என்றே அழைப்பார்கள். மன்னாதி மன்னர்கள், சிவனடியார்கள், சிறந்த பக்திமான்கள் எனப் பலரும் உங்களின் ராசியில் பிறந்தவர்கள்தான்.

கும்பம்

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே பணப்பற்றாக்குறை இருந்து வந்தது. அதற்கு நேர்மாறாக உங்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் பாக்கிய ஸ்தானாபதியான சுக்கிரனின் வீடான துலாத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. மேலும், பிறக்கும்போது சுக்கிரனும் அந்த வீட்டிலேயே இருக்கிறார். இந்த ஆண்டு உங்களிடம் நல்ல பணப்புழக்கம் இருக்கும். சேமிப்புகள் சிலவற்றில் முதலீடு செய்வீர்கள்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். வேலை குறித்த பயமும் மனத்தில் இருக்கும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகியும் மற்றும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்கிறார். இந்தக் காலகட்டம் வேலைக் குறித்த இடமாற்றம் செய்வதற்கு ஏற்றத் தருணம் ஆகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலைக் கிடைக்கும்.

2019

12.2.19 வரை உங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாகப் போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சில நேரங்களில் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அது போன்ற தருணங்களில் அவர்களின் குறிப்பறிந்து நடந்துகொண்டு அதற்கேற்ப வழிநடத்துங்கள்.

உங்களின் ராசிநாதன் சனி பகவான் இந்த ஆண்டு முழுக்க சனி 11-ம் வீடான லாப ஸ்தானத்தில் இருப்பதால், உங்களின் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். வீடு வாங்குவீர்கள். சிலருக்குப் புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டாகும்.

வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு பற்று வரவு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். புதிய கிளைகள் புதிய ஏஜன்சிகள் எடுப்பதற்கு மிகவும் ஏற்றத் தருணமிது.

உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி, உழைக்க வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களை அனுசரித்துப்போவது கூடுதல் பலன் தரும். நீங்கள் விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கும்.

பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கைகள் இருக்கும். 

மாணவர்களுக்கு இது நாள் வரை இருந்த சோம்பல் நீங்கும். கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்திப்படித்தால் சாதனைகள் படைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு அமோகமாக இருக்கிறது. மாற்றுப் பயிர்கள், மரப் பயிர்களைப் பயிரிட்டு நல்ல லாபம் பார்க்கலாம்.

2019 - ம் ஆண்டு சின்னச் சின்ன தடைகள் வந்தாலும், சாதகமான கிரக அமைப்புகள் இருப்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும் ஆண்டாக அமையும். 

கும்ப ராசி

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளி எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீகாட்டு விநாயகரைச் சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மேலும் முன்னேறுவீர்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்