வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (31/12/2018)

கடைசி தொடர்பு:17:45 (31/12/2018)

ஆங்கிலப் புத்தாண்டு முன்னேற்பாடுகள்- திருப்பதியில் வி.ஐ.பி சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருமலை திருப்பதியில், இந்த மாதம் 2018 - ம் ஆண்டின் கடைசி மாதம் என்பதாலும் பள்ளிக்குழந்தைகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை காலம் என்பதாலும், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குறிப்பாக, கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள்களுமே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் நாளை, செவ்வாய்க்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. இதையொட்டி நாளை லட்சக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பொருட்டு, திருமலை தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

 

திருப்பதி

நாளை அதிகாலை 4.30 மணிக்கு, சுவாமி தரிசனத்துக்காக நடை திறக்கப்படும். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, ஆர்ஜித சேவைகள் மற்றும் வி.ஐ.பி.கள், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசன சலுகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களையும் திருமலை தேவஸ்தானம் இன்றும் நாளையும் ரத்து செய்துள்ளது. 

 

திருப்பதி

கடந்த ஆண்டு முழுமைக்கும் அதாவது 2017 - 2018 - ம் ஆண்டு செலவுகளுக்காக 2,858 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்த 2018-2019 -ம் ஆண்டுக்காக 2,894 கோடி ரூபாயை ஒதுக்கி பக்தர்களுக்கு சேவை செய்யவிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க