மகாபெரியவா ஆராதனை விழா! - சுவாமிகளின் திருவருள் பெற்ற பக்தர்கள் | mahaperiyava arathana festival held today

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (02/01/2019)

கடைசி தொடர்பு:15:15 (02/01/2019)

மகாபெரியவா ஆராதனை விழா! - சுவாமிகளின் திருவருள் பெற்ற பக்தர்கள்

க்தர்களால் மகாபெரியவா என்று அன்போடு அழைக்கப்படும் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 25-ம் ஆண்டு ஆராதனை மகோற்சவம் காஞ்சி மடம் சார்பில் சுவாமிகளின் அதிஷ்டானத்தில் கடந்த 31-ம் தேதி தொடங்கி இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது. இன்று மகா பெரியவா ஆராதனை வைபவம் நடைபெற்றது.

மகா பெரியவா

தன்னுடைய 13 -ம் வயதில் துறவறம் ஏற்ற மகா ஸ்வாமிகள் 87 ஆண்டுகள் மடத்தின் பீடாதிபதியாக இருந்து அருளாட்சி புரிந்தார். அவர் காலத்தில் பல ஆயிரம் பக்தர்கள் காஞ்சி மடம் நோக்கி வந்தனர். பக்தர்களின் வாழ்வில் சுவாமிகளின் அருளுரையும், அன்பும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. அவர் தம்மை நாடி வந்த எண்ணற்ற பக்தர்களின் வாழ்வில் புரிந்த அற்புதங்களும் அதிசயங்களும் அநேகம்.
சுவாமிகளின் உபந்யாசங்கள் தொகுக்கப்பட்டு `தெய்வத்தின் குரல் ' என்ற தலைப்பில் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. நவீன காலத்தில் வாழும் நமக்கு வேதங்கள், புராணங்கள், மரபுகள் மற்றும் சடங்குகள் ஆகியன குறித்த சிறந்த விளக்கங்களோடு கூடிய ஆகச் சிறந்த வழிகாட்டியாகத் தெய்வத்தின் குரல் விளங்குகிறது.

பெரியவா

சுவாமிகள் 1994 -ம் ஆண்டு ஸித்தியடைந்தார். அவரின் ஆராதனை ஆண்டுதோறும் சிறப்பாக அவரது அதிஷ்டானத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று   25-ம் வருட மகா ஆராதனையை முன்னிட்டு காலை 7 மணிமுதலே ஶ்ரீருத்ரபாராயணம், பூஜை, ஹோமம் ஆகியன நடைபெற்றன. நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் பூர்ணாஹூதியும் அதிஷ்டானத்தில் அபிஷேகமும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் ஆராதனை வைபவத்தில் கலந்துகொண்டு பரமாசார்ய சுவாமிகளின் திருவருள் பெற்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க