நாளை அனுமத் ஜயந்தி... அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் | Hanumath jayanthi to be celebrated tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (04/01/2019)

கடைசி தொடர்பு:17:45 (04/01/2019)

நாளை அனுமத் ஜயந்தி... அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்

மார்கழி மாதத்து வைபவங்களுள் அனுமத் ஜயந்தி சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதம் அமாவாசையும் மூல நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாளில் கொண்டாடப்படுகிறது. 

அனுமன்


அனுமன் வீரத்தின் அடையாளம். ராம நாமத்தைத் தன் பலமாகக்கொண்டு அதிவீர பராக்கிரமங்களைச் செய்தவர். சதா சர்வ காலமும் ராம நாமத்தை ஜெபித்துக்கொண்டும் ராம கதைகளைக் கேட்டுக்கொண்டும் இருப்பவர்.  

எங்கு ராமாயணமும் பாகவதமும் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் பிரசன்னமாகியிருப்பார் என்பது நம்பிக்கை. இன்றும் உபந்யாசம் நடைபெறும் இடங்களில் அனுமனுக்கென்று ஒரு பலகை போடப்படுவது வழக்கம்.  

அனுமத் ஜயந்தி

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவி துளசிதாசர், ராமாயணம் சொன்னபோது அனுமன் வந்தமர்ந்து கேட்டதாகவும் அவரைத் துளசிதாசர் அடையாளம் கண்டு, அவர் பாதங்களைப் பற்றி ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் வேண்டும் என்று வேண்டினார்.

அனுமனும் துளசிதாசருக்கு உரிய நேரத்தில் சுவாமியின் தரிசனம் பெற அருள்புரிந்தார். துளசிதாசர் பாடிய 'அனுமன் சாலிசா'  அனுமனின் பராக்கிரமங்களை விளக்கும். அனுமன் சாலிசாவைப் பாராயணம் செய்ய மனபயம் நீங்கி தைர்யம் பிறக்கும். 

பெரும்பாலான கோயில்களில் அனுமனுக்குச் சந்நிதி உண்டு. அனுமனுக்கெனத் தனி ஆலயங்களும் அநேகம் உள்ளன.

 இந்த நாளில் நாம் அனுமனைத் தரிசித்து வழிபடச் சகல தோஷங்களும் நீங்கும். அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபடுவதன் மூலம் ராகு தோஷத்தால் ஏற்படும் தொல்லைகள் தீரும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க