வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/01/2019)

கடைசி தொடர்பு:18:00 (05/01/2019)

ஆண்டாள் நீராட்டு உற்சவம் - ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஜனவரி 8-ம் தேதி தொடங்கும் வைபவங்கள்!

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கு உகந்த மாதம். அனைத்துப் பெருமாள் திருத்தலங்களிலும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாளின் பாசுரங்களைப் பாடி வழிபாடு செய்வது வழக்கம். ஆண்டாளின் ஜன்ம பூமியான ஸ்ரீவில்லிபுத்தூரி நாச்சியார் திருக்கோயிலில்  இந்த மார்கழி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூரி ஆண்டாள் நீராட்டு உற்சவம் வரும் 8 -ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆண்டாள் நீராட்டு உற்சவம்


இந்த வைபவத்தின் முக்கிய நிகழ்வுகளாக 9-ம் தேதி கோதை நாச்சியார் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளலும், 10-ம் தேதி கண்ணன் திருக்கோலத்தில் எழுந்தருளலும் நிகழும். 11-ம் தேதி முத்தங்கி சேவையும், 12 -ம் தேதி பெரிய பெருமாள் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளலும் நடைபெறும். 13-ம் தேதி நடைபெறும் சவுரித் திருமஞ்சனசேவை விசேஷமானது. 15-ம் தேதி மணவாள மாமுனிகள் மங்களாசாசனமும் நடைபெறும்.

ஆண்டாள் நீராட்டு உற்சவம்

ஜனவரி 11-ம் தேதி கூடாரவல்லியும் கொண்டாடப்படுகிறது. அப்போது வெண்ணெய்யும் அக்கார அடிசலும் நைவேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படும்.   இந்த வைபவங்களில் கலந்துகொண்டு சேவித்தால் எல்லா நலன்களும் சூழும். திருமணம் தாமதமாகும் இளவயதினருக்கு விரைந்து திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம். இந்த நாள்களில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.       

நீங்க எப்படி பீல் பண்றீங்க