அனுமன் ஜயந்தி - குளிரையும் பொருட்படுத்தாது ஆஞ்சநேயரை வணங்கிய மக்கள்! | anjaneyar jeyanthi funciton held in grand manner at Namakkal

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (06/01/2019)

கடைசி தொடர்பு:11:07 (06/01/2019)

அனுமன் ஜயந்தி - குளிரையும் பொருட்படுத்தாது ஆஞ்சநேயரை வணங்கிய மக்கள்!

நாமக்கல் ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒரு லட்சத்து எட்டு  வடமாலை சாற்றப்பட்டது. நாமக்கல் நகரின் மத்தியில், புராண சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆஞ்சநேயர்

ஆண்டு தோறும், மார்கழி மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, கோலாகலமாக நடந்தது. காலை, 5:00 மணிக்கு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒரு லட்சத்து, 8 வடைமாலை சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், மதியம், 1:00 மணிக்கு, தீபாராதனை, தங்கக் கவச அலங்காரம் நடந்தது. காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியைத் தரிசனம் செய்தனர். தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கினர்.

ஆஞ்சநேயர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க