உத்தராயன புண்யகால உற்சவம்... திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது | Uthrayanam Punyakala utsavam started yesterday in tiruvannaamalai

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (07/01/2019)

கடைசி தொடர்பு:16:00 (07/01/2019)

உத்தராயன புண்யகால உற்சவம்... திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது

பஞ்சபூதத் தலங்களுள் அக்னி தலம் எனக் கூறப்படும் திருவண்ணாமலையில் உத்தராயன புண்யகால உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.  சூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கும் ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களை  தட்சிணாயனம் என்றும் தை முதல் ஆனி வரையிலான ஆறுமாதங்களை உத்தராயனம் என்றும் அழைப்பர்.  


திருவெம்பாவை பதிகம் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் அருளப்பட்டது. எனவே, இங்கு  மார்கழி மாதத் திருவெம்பாவை உற்சவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். மேலும், தை முதல் நாளில்  முடியும்வகையில் 10 நாள் உற்சவம்  திருவண்ணாமலையில்  நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவம் உத்தராயன புண்யகாலம் உற்சவம்  எனப்படும். 


10 நாள்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான உற்சவம் நேற்று 6.1.2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை ஒட்டி இறைவனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கொடிமரத்தருகே  விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோரோடு இறைவனும் இறைவியும் எழுந்தருளினர். உற்சவத்தின் 10 நாள்களும் சுவாமி வீதிஉலா வருவதுபோலவே 10 நாள்களும் மாணிக்கவாசகரும் வீதியுலா வருவார். நேற்றுமுதல் அங்கு திருவாசக முற்றோதலும் நடைபெற்றுவருகிறது. இந்த உற்சவம் வரும் ஜனவரி 15 அன்று தை முதல் நாளில் முடிவடையும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க