சாரங்கபாணி கோயிலில் மகர ஸங்கரமண உற்சவம்...10-ம் தேதி கருடசேவை! | sarangapaani koil karduseva

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (08/01/2019)

கடைசி தொடர்பு:19:45 (08/01/2019)

சாரங்கபாணி கோயிலில் மகர ஸங்கரமண உற்சவம்...10-ம் தேதி கருடசேவை!

கும்பகோணம் - ஸ்ரீகோமளவல்லித் தாயார் சமேத அருள்மிகு சாரங்கபாணி ஆராவமுதப் பெருமாள் திருக்கோயில் சிறப்புப் பெற்றது. திவ்ய தேசங்களுள் 12வது திவ்ய தேசமாகக் கருதப்படும் இக்கோயில்

பெருமாள் வழிபாட்டுக்குரிய தலங்களுள் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்கள் பிரசித்திபெற்றவை. அவற்றுள் திருக்குடந்தை, கும்பகோணம் - ஸ்ரீகோமளவல்லித் தாயார் சமேத அருள்மிகு சாரங்கபாணி ஆராவமுதப் பெருமாள் திருக்கோயில்  சிறப்புப் பெற்றது. திவ்ய தேசங்களுள் 12 வது திவ்ய தேசமாகக் கருதப்படும் இக்கோயில், கருட சேவை விழா சிறப்பானது. .

கருடசேவை

திருவரங்கனின் பெருமையைக் கூறும் பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாக இத் தலம் கருதப்படுகிறது. திவ்ய தேசங்களுள் 12வது திவ்ய தேசமாகக்கருதப்படும் இக்கோயில், கருட சேவை பன்னிரு ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளனர்.

இந்தத் தலத்தில் சித்திரைத் திருவிழா, ஸங்கரமண உற்சவம், வைகாசி வசந்தோற்சவம், மாசி தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகிய வைபவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.  7.1.19 அன்று மகர ஸங்கரமண உற்சவம், தொடங்கியது. வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கவும் திருக்கோஷ்டியார் பாசுரங்கள் இசைக்கவும் கொடியேற்றம் நடைபெற்றது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று பெருமாள் இந்திர வாகனத்தில் எழுந்தருளினார். 

 

கருடசேவை


பெருமாள், கோமளவல்லித்தாயாரை திருமணம் செய்துகொள்ளத் தேர் ஏறிவந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, சந்நிதி தேர் போன்ற அமைப்புடனேயே காணப்படும். தேரின் இரு புறமும் உள்ள வாசல்கள் உத்தராயனம், தட்சிணாயனம் என்று அழைக்கப்படும். இந்தத் தலத்தின் தேரும் விசேஷமானது. 

உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 10-ம் தேதி அன்று கருட சேவை நடைபெற உள்ளது. உத்தராயன புண்யகாலத்தின் தொடக்கமான தை 1 அன்று திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெறுவர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க