ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு எண்ணெய்க்காப்பு உற்சவம்! | Srivilliputhur Andal temple festival

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (08/01/2019)

கடைசி தொடர்பு:21:40 (08/01/2019)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு எண்ணெய்க்காப்பு உற்சவம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு மார்கழி மாத எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெற்றது. இதை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

ஆண்டாள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிகத்தலமாக உள்ளது. இந்தக் கோயிலில் மார்கழி மாத எண்ணெய்க்காப்பு திருவிழா இன்று தொடங்கியது. அதன்படி, காலை கோயிலில் இருந்து நான்கு ரத வீதிகளில் வாகனத்தில் எழுந்தருளிய ஆண்டாள் திருமுக்குளம் அருகே உள்ள எண்ணெய்க் காப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அதன் பின்னர், எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெற்றது.

ஆண்டாள்

அப்போது ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களும் பங்கேற்று இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர். அதன் பின்னர், எண்ணெய்க்காப்பு மண்டபத்திலிருந்து ஊஞ்சல் மண்டபத்துக்கு உலா வந்தார்.

ஆண்டாள்

அங்கே ஆண்டாளுக்குத் திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பின்னர், ஆண்டாள் அங்கே கூடியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜனவரி 15-ம் தேதி வரை எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெற உள்ளது. எண்ணெய்க்காப்பு திருவிழாவையொட்டி தினமும் வெவ்வேறு அலங்காரங்களில் ஆண்டாள் காட்சியளிக்க உள்ளார்.

ஆண்டாள்

உற்சவத்தின்போது சங்கு ஊதப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.