‘புனித ஹஜ் பயணம்’ - தமிழகத்தில் 6,379 பேர் விண்ணப்பம் | Haj pilgrimist selection

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (09/01/2019)

கடைசி தொடர்பு:04:00 (09/01/2019)

‘புனித ஹஜ் பயணம்’ - தமிழகத்தில் 6,379 பேர் விண்ணப்பம்

2019- ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 6379 பேர்  விண்ணப்பித்துள்ளதாக ஹஜ் கமிட்டி  அறிவித்துள்ளது.

ஹஜ் பயணம்

இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான  இந்த  புனித பயணம்  மேற்கொள்வதற்கு ஆண்டுதோறும் தமிழகத்தைச் சேர்ந்தமுஸ்லிம் மக்களிடம் இருந்து விதிமுறைகளுக்கு உள்பட்டு மும்பை இந்திய ஹஜ் குழு சார்பில் தமிழ்நாடு மாநில  ஹஜ் குழு விண்ணப்பங்களை அளிக்கிறது.

அதன்படி இந்த ஆண்டு 2019 ஹஜ் பயணம் செல்ல பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் அளித்தனர்.
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலம் இப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்ற விதிமுறையை  இந்திய ஹஜ் குழு 
செயல்படுத்தி வருகிறது.மேலும்  2020- ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை செல்லக்கூடிய பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். அத்துடன் ஐஎப்எஸ் குறியீடு உடைய வங்கியில் உள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்க வேண்டும் என்பதும் ஹஜ் பயணிகளுக்கான கட்டாய விதிமுறையாகும்.

புனிதப்பயணம்

இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் ஹஜ் பயணம் செல்ல  8 குழந்தைகள் உள்பட  6,379 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில ஹஜ் குழு தெரிவித்துள்ளது.ஹஜ் பயணத்துக்கு செல்பவர்கள் யார் என்பதை முடிவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை  (11-ம் தேதி) சென்னை, ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அன்று  விண்ணப்பித்த அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஹஜ் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலும்  விவரங்கள், அதற்கான வழிமுறைகளை, இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in  என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.