திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் - விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு | Kumbabishkam at thirunallaar

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (09/01/2019)

கடைசி தொடர்பு:17:25 (09/01/2019)

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் - விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு

புதுவை மாநிலம், காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது. நவகிரகத் தலங்களுள் சனிபகவானுக்குரிய தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு ஶ்ரீபிராணாம்பிகை சமேத தர்ப்பாரண்யேஸ்வரராகவும் ஶ்ரீ நடவிடங்க செண்பகத்தியாகேச பெருமானாகவும் இறைவன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இது தேவாரப் பாடல்பெற்ற தலம் ஆகும். இந்தத் தலத்தில் சனிபகவான் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். எனவே, இந்தத் தலத்தில் வழிபாடு செய்ய சனியின் பார்வையால் ஏற்படும் தீமைகள் விலகி நன்மை ஏற்படும்.

 

கும்பாபிஷேகம்


பழைமையும் பெருமையும் கொண்ட இந்த ஆலயத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆலயங்களில் ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆலயத்தைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்யவேண்டியது அவசியம். அதன்படி, திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் 11.2.2019 அன்று அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


வரும் 3.2.19 கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து 7 நாள்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. 11.2.19 அன்று மஹா கும்பாபிஷேகமும் சண்டீஸ்வர ஹோமமும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறையருளைப் பெறுவர். இதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க