பழநி தைப்பூசம்! - வரும் 21-ல்  தேர்த் திருவிழா | thaipoosam in palani

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (10/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (10/01/2019)

பழநி தைப்பூசம்! - வரும் 21-ல்  தேர்த் திருவிழா

 அறுபடைவீடுகளில் முருகக் கடவுள் ஞானதண்டாயுதபாணியாய் அனுகிரகம் பண்ணும் முதன்மையான தலம் பழநி. இங்கு நடைபெறும் பண்டிகைகளுள் தைப்பூசம் மிகவும் விசேஷமானது.

ழநி, ஆவினன்குடி தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 15 முதல் 24 வரை நடைபெற உள்ளது. அறுபடைவீடுகளில் முருகக் கடவுள் ஞானதண்டாயுதபாணியாய் அனுகிரகம் பண்ணும் முதன்மையான தலம் பழநி.

திருவிழா

இங்கு நடைபெறும் பண்டிகைகளுள் தைப்பூசம் மிகவும் விசேஷமானது. இதற்காகப் பக்தர்கள் விரதம் இருந்து திரளாகப் பாதயாத்திரையாகச் சென்று முருகனை தரிசிப்பார்கள். இந்த விழா 15-ம் தேதி  காலை 10.30 மணி முதல் 11.30 க்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான ஆறாம் திருநாளான 20- ம் தேதி ஶ்ரீவள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமியின் திருக்கல்யாண வைபவமும், அதைத் தொடர்ந்து தைப்பூச தினமான 21 அன்று தோளுக்கினியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளலும் தேரோட்டமும் நடைபெறும். திருவிழாவின் 10 நாள்களும் இறைவன் வள்ளி தேவசேனா சமேதராக எழுந்தருளித் திருவீதியுலா வருவார்.

தைப்பூசத் திருவிழா


மூன்றாம், நான்காம்  நாள்களில் காமதேனு வாகனத்திலும் ஐந்தாம் நாள் யானை வாகனத்திலும் முத்துக்குமாரசாமி எழுந்தருள்வார். விழாவின் கடைசி நாளான 24-ம் தேதி இரவு தெப்பத்தேரோடு விழா நிறைவுறக் கொடி இறக்கம் நிகழும். அனைத்து நிகழ்வுகளும் திருவாவினன்குடி பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து பக்தர்களுக்காக சிறப்புப்  பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க