வெளியிடப்பட்ட நேரம்: 02:44 (14/01/2019)

கடைசி தொடர்பு:07:55 (14/01/2019)

இந்த வார ராசிபலன் ஜனவரி 14 முதல் 20 வரை

இந்த வார ராசிபலன் ஜனவரி 14 முதல் 20 வரை

மேஷ ராசி மேஷராசி அன்பர்களே!  

பணவரவுக்குக் குறைவிருக்காது. அவ்வப்போது மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டாலும், உடனே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். சகோதர வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களால் செலவுகளும் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். 

அலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வு களில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக் குறைவும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 15, 16, 19, 20
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 5,7


வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

ரிஷப ராசி ரிஷபராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப் போது உற்சாகம் தரும் சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி தரும். வழக்குகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.   

அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால், உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை நிறைவேறி மகிழ்ச்சி தரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும். ஆனாலும், அதற்காகக்  கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
மாணவர்கள் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு,அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 17, 18
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1,5

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் 
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே


மிதுன ராசிமிதுனராசி அன்பர்களே!

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், உடனே சரியாகிவிடும். வாழ்க்கைத்துணைவழி  உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளையும் ஏற்படுத்துவதாக இருக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகை களும் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.

ராசிபலன்

கலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 15, 16, 19, 20
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே!.


கடகம் கடகராசி அன்பர்களே!

பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக ஊழியர்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். அதிகாரிகள் சற்று கண்டிப்பு காட்டினாலும், அனுசரித்துச் செல்வது நல்லது.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியம்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, ஆசிரியர், பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குக் குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் இருக்காது. ஆனால், பொறுப்புகள் கூடுவதால் சற்று அசதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண் களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 15, 16, 17, 18
அதிர்ஷ்ட எண்கள்: 2 ,3, 7

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.


சிம்மம்சிம்மராசி அன்பர்களே!

வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பேச்சினால் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். செலவுகள் அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். 
 அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவர்களுக்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:17, 18, 19, 20
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7
சந்திராஷ்டம நாள்: 14

வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
 மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
 கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் 
 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


கன்னி கன்னிராசி அன்பர்களே!

இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் வாக்குறுதி எதுவும் தரவேண்டாம். பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக் கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.

 அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.

கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். வாய்ப்புகள் கிடைப் பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.
மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.

அதிர்ஷ்ட நாள்கள்: 19, 20
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:3, 5
சந்திராஷ்டம நாள்கள்: 14, 15,16

வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே 


துலா ராசி துலாராசி அன்பர்களே!

வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, குடும்பப் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு எடுப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள், அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.
மாணவர்கள் பாடங்களை உடனுக்குடன் படித்து, மாதாந்திரத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். ஜோதிடமாமணி கிருஷ்ணதுளசி

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்குப் பணிச்சுமை குறைவதுடன்  சில சலுகைகளைப் பெறவும் வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: 15, 16
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,4
சந்திராஷ்டம நாள்கள்: 17, 18

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே


விருச்சிக ராசிவிருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத பொருள் சேர்க்கை  உண்டாகும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.

கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை. 
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும்  வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

அதிர்ஷ்ட நாள்கள்: 15, 16, 17, 18
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:7, 9
சந்திராஷ்டம நாள்கள்: 19,20

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.

 

தனுசுதனுசுராசி அன்பர்களே!

ருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவிக்கிடையியே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது  நல்லது.  வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச்  செல்வது நல்லது.
மாணவர்கள் தேவையில்லாமல்  வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்தி தரும் வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 17, 18, 19, 20
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை 


மகரம் மகரராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற் கொள்ளவேண்டி இருக்கும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும்.
அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவு படுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.
மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆசிரியர்கள் தருவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 19, 20
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து  உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி  திசை தெய்வ மானபலவும்
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல  அடியா ரவர்க்கு மிகவே.    


கும்பம்கும்பராசி அன்பர்களே!

வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். வீண்செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது அவசியம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 
வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைத்துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.

மாணவர்கள் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 15, 16
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 8

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன்  நம்மை அளித்து காப்பான் 

 

மீனம் மீனராசி அன்பர்களே!

பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. குடும்ப விஷயம் தொடர்பாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். தந்தையுடன் இருந்து  வந்த கருத்துவேறுபாடு நீங்கும். தந்தைவழி உறவினர்கள் வருகையால் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சிலருக்கு அவர்கள் விரும்பும் ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். 
கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்திப் படிப்பீர்கள். ஆசிரியரின் கேள்விகளுக்கு உடனுக்குடன்  பதில் சொல்லி பாராட்டுப் பெறுவீர்கள்.
குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 14, 18
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,6

வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!

 


டிரெண்டிங் @ விகடன்