சபரிமலையில் மகரஜோதி... ஐயப்பனை தரிசிக்க குவியும் பக்தர்கள்! | Makara jothi dharsan in sabarimala

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (14/01/2019)

கடைசி தொடர்பு:15:00 (14/01/2019)

சபரிமலையில் மகரஜோதி... ஐயப்பனை தரிசிக்க குவியும் பக்தர்கள்!

பரிமலையில் இன்று மாலை மகரஜோதி தரிசனம் நிகழ இருக்கிறது.

சபரிமலை

கார்த்திகை மாதத்திலிருந்து சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் குவிவது வழக்கம். நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். இதையொட்டி சபரிமலையில் மண்டலபூஜையும் மகர விளக்கு பூஜையும் கடந்த மாதம் முதல் நடந்து வருகின்றது. மகர விளக்கு பூஜை கடந்த 30.12.19 அன்று தொடங்கி 20.1.19 வரை நடைபெறவிருக்கிறது.

அதன் ஒரு நிகழ்வாக, பக்தர்களுக்கு ஜோதி ரூபமாக ஐயப்பன் பொன்னம்பலமேட்டில்  தரிசனம் தரும் நிகழ்வு இன்று 14.1.2019  மாலை நிகழ இருக்கிறது. பந்தள மகாராஜா அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டி கொண்டுவரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன் பின் மகரஜோதி தரிசனம் நிகழும். இதைத் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். பக்தர்கள் வசதிக்காக நிலக்கல் - பம்பை இடையே இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.  

 பக்தர்கள்

அண்மைக்காலமாகச் சர்ச்சைகளால் சூழப்பட்டிருக்கிறது சபரிமலை. எனவே, மகரஜோதியைத் தரிசிக்கவரும் பக்தர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இருக்கக் கூடாது என்பதை மனதில் கொண்டு மாநிலக் காவல்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க