தை மாதம் விழாக்கள், விசேஷங்கள்! #VikatanPhotoStory | Festivals of Thai Month

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (14/01/2019)

கடைசி தொடர்பு:16:28 (14/01/2019)

தை மாதம் விழாக்கள், விசேஷங்கள்! #VikatanPhotoStory

முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தை அமாவாசை வழிபாடு ஆகிய பல முக்கியமான விசேஷ தினங்கள் தை மாதத்தில்தான் வருகின்றன. 

தை மாதம் விழாக்கள், விசேஷங்கள்! #VikatanPhotoStory

தை மாதம், தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை, முருகப் பெருமானுக்கு உரிய தைப் பூசம், முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தை அமாவாசை வழிபாடு ஆகிய பல முக்கியமான விசேஷ தினங்கள் இந்த மாதத்தில்தான் வருகின்றன. 

தை மாதத்தில் வரும் விழாக்களைப் பற்றியும், விசேஷங்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்...

15.1.19 தைப் பொங்கல்

பொங்கல்

தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா `தைப் பொங்கல்’. இந்த நாளில் உழவுத்தொழிலுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பொங்கல் தினத்தன்று அறுவடை செய்த புத்தரிசி கொண்டு பொங்கல் செய்து வழிபடும் பண்டிகை இது. 

16.1.19 மாட்டுப் பொங்கல் 

மாட்டுப் பொங்கல்

உழவுக்கு உற்ற தோழனாக விளங்கும் கால்நடைகளைக் கொண்டாடும் விதமாக மாட்டுப் பொங்கல் அனுசரிக்கப்படுகிறது. மாட்டுப் பொங்கல் அன்று உழவுக்கு உதவிய தங்களது கால்நடைச் செல்வங்களான ஆடு, மாடுகளைக் குளிப்பாட்டி சந்தனம் குங்குமம் வைத்து, மாலை சூட்டி அலங்கரித்துப் படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
 
17.1.19 காணும் பொங்கல்

காணும் பொங்கல்

தை மூன்றாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை `காணும் பொங்கல்.’ பெரியோர்களைச் சென்று சந்தித்து ஆசிபெறுவது, புதிய இடங்களுக்குச் சென்று மகிழ்வது ஆகியன இன்றைய தினத்தின் சிறப்பாகும். கிராமங்களில் உறி அடித்தல், ஏறு தழுவுதல், வழுக்கு மரம் ஏறுதல் ஆகிய பாரம்பர்யமிக்க விளையாட்டுகளுடன் கூடிய திருவிழாவாகக் கொண்டாடப்படும். 

18.1.19 & 2.2.19 தை மாதப் பிரதோஷம்

பிரதோஷம்

சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த நேரம் பிரதோஷ காலம். இந்த மாதம் வரும் இரு பிரதோஷ தினங்களிலும் விரதமிருந்து சிவபெருமானை வணங்கினால் துன்பங்கள் யாவும் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

20.1.19 தை பௌர்ணமி

தை மாதம் - பௌர்ணமி

அம்பிகையை பூஜை செய்வதற்குப் பௌர்ணமி உகந்த தினமாகும். நிறைமதி நாளான இன்றைய தினத்தில் விரதமிருந்து வழிபட்டால் அம்பிகையின் பரிபூரண அருளைப் பெற முடியும். 

21.1.19 தைப் பூசம்

பூசம்

பூசம் நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்த நாளில் தைப் பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப் பூசம் முருகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாள். தைப்பூச நாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட, முருகன் அருளால் முக்திப் பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

26.1.19 வாஸ்து நாள்

வாஸ்து

வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. புது வீடு கட்டத் தொடங்குபவர்கள் இந்த நாளில் வாஸ்து பூஜை செய்து தொடங்குவது நல்லது. வாஸ்து பூஜைக்கு ஏற்ற நேரம் காலை 10.41 முதல் 11.17 வரை.  

2.2.19 தேவமாதா பரிசுத்தமான திருநாள்

தேவமாதா

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானது தேவமாதா பரிசுத்தமான திருநாள். தேவமாதா பரிசுத்தமான நாளில் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. 

4.2.19 தை அமாவாசை

 

தை அமாவாசை

முன்னோர்களை வழிபட உகந்த நாள் அமாவாசை. ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை தினங்கள் முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள்களாகும். இன்றைய தினத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடவேண்டியது அவசியம். இந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானமும் செய்து வழிபட, முன்னோர்களின் ஆசியுடன் இறையருளும் கிடைக்கும்.

12.2.19 ரத சப்தமி

ரத சப்தமி

தை மாதத்தின் முதல் நாளில் தன் வடதிசைப் பயணத்தைத் தொடங்கும் சூரியன், தை அமாவாசைக்கு பின் வரும் சப்தமி திதியிலிருந்துதான் தன் ஒளிக் கிரணங்களுக்கு வெப்பத்தைக் கூட்டுகிறான் என்பது ஐதீகம். இந்த நாளில் எருக்க இலைகளைத் தலையில் வைத்து, குளித்து சூரிய வழிபாடு செய்ய வேண்டும். பித்ருக்களை வழிபடுவதற்கும் உகந்த நாள் இது. வறியவர்களுக்கு அன்னதானம் செய்தால் நன்மை உண்டாகும்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்