வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (14/01/2019)

கடைசி தொடர்பு:15:42 (14/01/2019)

பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? #PongalFestival

நாளை, நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள், உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபாடுசெய்வர்.

பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?

இந்த நல்ல நாளில் பொங்கல் வைக்கவும் , சூரியனுக்கு பூஜை செய்து வழிபடவும், கோடீஸ்வர சிவாசாரியாரிடம் நல்ல நேரம்குறித்துக் கேட்டபோது, அவர் கூறியது:

"நாளை மகர சங்கராந்தி. சூரியன், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குச் செல்கிறார். கூடவே, சூரியனின் தனது தென்திசைப் பயணமான தட்சணாயனம் முடிந்து வடதிசைப் பயணமான உத்தராயனப் புண்யகாலத்தின் தொடக்கமும் தை முதல் நாளான நாளையே நிகழ்கிறது . இந்த நன்னாளில், ஷேத்திரங்களில் நீராடி இறைவனை வழிபடுவது விசேஷம். வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடுபவர்கள்

சூரிய பூஜை

காலையிலேயே நீராடி, பொங்கல் பானை வைக்க வேண்டும். காலை  7.45 - 8.45 வரை சூரிய ஹோரை, 8.40ல் இருந்து 9.40 வரை சுக்கிர ஹோரையிலான நேரத்தில் பானையை வைத்து பொங்கல் செய்வது விசேஷம். அதேபோல, 11.10 முதல் 11.40 வரை சந்திர ஹோரையில்,  பொங்கல், கரும்பு, பழம், தேங்காய் முதலியவற்றையும் சூரியனுக்குப் படைத்து பூஜைசெய்து, சூரிய பகவானின் அருளைப் பெறலாம் " என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க