இன்று குழந்தை வரமருளும் - புத்ரதா ஏகாதசி! | putrada ekadasi

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (17/01/2019)

கடைசி தொடர்பு:14:30 (17/01/2019)

இன்று குழந்தை வரமருளும் - புத்ரதா ஏகாதசி!

ஒவ்வொரு ஏகாதசி திதிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. தைமாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி எனப்படும். இந்த நாள் விரதம் புத்ரபாக்கியம் அருளும் சிறப்பினையுடையது என்று சொல்லப்படுகிறது.

வ்வொரு மாதமும் இரண்டு தினங்களில் ஏகாதசி திதி வருவதுண்டு. ஓராண்டில் மொத்தம் 24 ஏகாதசி திதிகள் வரும். சில ஆண்டுகளில் 25 திதிகளும் வருவதுண்டு.

ஏகாதசி

ஒவ்வொரு ஏகாதசி திதிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. தைமாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி எனப்படும். இந்த நாள் விரதம் புத்ரபாக்கியம் அருளும் சிறப்பினையுடையது என்று சொல்லப்படுகிறது. பொதுவாகவே இவ் விரதம் விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. ஏகாதசி நாள்களின் சிறப்பை `ஏகாதசி மகாத்மியம்' விளக்குகிறது. 

ஒரு காலத்தில் பத்மாவதி என்கிற நகரை சுகேதுமான் என்கிற அரசன் ஆண்டுவந்தான். தர்ம சீலனான அவனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. எனவே வருத்தத்தில் இருந்தவனிடம் முனிவர்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்குமாறு கூறினர். தைமாதத்தின் சுக்லபட்ச ஏகாதசியான புத்ரதா ஏகாதசி அன்று அவன் விரதம் இருந்து மகாவிஷ்ணுவைப் பூஜை செய்தான். மறுநாள் துவாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்தித் தன் விரதத்தை முடித்துக்கொண்டான். அந்த விரதம் முடித்த பத்து மாதங்களில் அவன் ராணிக்கு ஓர் அழகிய ஆண்மகன் பிறந்தான். பலகாலம் அவன் அந்த தேசத்தை ஆண்டு உத்தமனாக வாழ்ந்தான் என்று கூறப்படுகிறது.

 

perumal

அத்தகைய சிறப்பு மிக்க தினம் இன்று. இன்றைய தினத்தில் உபவாசம் இருப்பவர்கள் இருக்கலாம். இயலாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம்.இன்று விரதம் இருப்பவர்கள் நாளை காலை 06.39 இல் இருந்து 10.14 க்குள் துவாதசி பாரணை செய்யலாம்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க