விவேகானந்தர் குறும்படப் போட்டி அறிவிப்பு! - ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தது ராமகிருஷ்ண மடம் | Short film Competition announcement for youngsters on behalf of Vivekanandha by Ramakrishna Math - First prize is 1 lakh

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (18/01/2019)

கடைசி தொடர்பு:18:20 (18/01/2019)

விவேகானந்தர் குறும்படப் போட்டி அறிவிப்பு! - ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தது ராமகிருஷ்ண மடம்

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சார்பில், சுவாமி  விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவின் 125-ம் ஆண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களின் ஆன்மிக ஈடுபாட்டை அதிகரிக்கும் வண்ணம் ராமகிருஷ்ண மடம் ஒரு குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது. 

ராமகிருஷ்ண மடம்

இந்தக் குறும்படப் போட்டியில், 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் எவர் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவின் சாரமாக, கீழ்க்கண்ட ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் குறும்படம் அமைந்திருக்க வேண்டும்.  

1) எல்லையில்லா இளைஞர் சக்தி

2) இன்றைய இந்தியாவுக்குத் தேவையான தேசபக்தி

3) பாரதப் பெண்களின் ஆன்ம பலம்

4) பாரதம் காட்டும் சமாதானம்

5) எல்லா சிந்தனைகளையும் ஏற்றுக்கொள். ஆனால், உனக்குரிய மார்க்கத்தில் உன் தனித்தன்மையுடன் ஞானம் பெறு.

6) இயற்கையைப் போற்றுவதும் காப்பதும் இறையம்சமே!   

விவேகனந்தர்

இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறுகிறவர்களுக்கு, முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இரண்டாவது பரிசாக 75,000. மூன்றாவது பரிசாக 60,000. ஆறுதல் பரிசாக 15 பேருக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்படும். 

இந்தப் போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள், பிப்ரவரி 15 -ம் தேதிக்குள், மடத்தின் இணையதளம் வாயிலாக 100 ரூபாயை கட்டணமாகச் செலுத்தி, தங்களின் பெயரைப் பதிவுசெய்துகொண்டு, குறும்படத்தை அனுப்பிவைக்க வேண்டும். 

இதுகுறித்து மேலும் தகவல்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள், 63742-13060, 63742-13050, 94980-91326 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க