தை பூசம், தை பௌர்ணமி - திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் எது? | Best time for thiruvannamalai girivalam on thaipusam

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (19/01/2019)

கடைசி தொடர்பு:16:20 (19/01/2019)

தை பூசம், தை பௌர்ணமி - திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் எது?

லையே லிங்கமாக விளங்கும் மகத்துவம் பெற்றது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பக்திப் பரவசமூட்டும் அற்புதம் ஆகும். கிரிவலம் வருவதன்மூலம் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், உள்ளமும் பண்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்றுவந்த பக்தர்கள், இப்போது பல்லாயிரக்கணக்கில்  பங்கேற்று வருகிறார்கள்.

திருவண்ணாமலை கிரிவலம்

பௌர்ணமி மற்றும் அமாவாசை நாள்களில், 14 - கி.மீ தொலைவிலான கிரிவலப் பாதையைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வலம்வந்து அருணாசலேசுவரரை வழிபடுவது வழக்கம். முக்கியமான நாள்களில், இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தொடுவதும் உண்டு. நாளை (20.1.19) தை மாத பௌர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வருவர். அவர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க ஏற்பாடுசெய்திருக்கிறது.

கிரிவலம்

தை மாத பௌர்ணமி நாளை, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20) பிற்பகல் 1.17 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை (ஜனவரி 21) காலை 11.08 மணிக்கு முடிவடைகிறது. எனவே, பௌர்ணமி திதி இருக்கும்  இந்த குறிப்பிட்ட காலம், கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரமாகும். மேலும்,  கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (20, 21.1.19) ஆகிய இரண்டு தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையிலிருந்து நாளை (ஜனவரி 20) மாலை 6 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டு, இரவு 9.25 மணிக்கு வேலூரைச் சென்றடையும். அதற்குப் பிறகு, சிறப்பு ரயிலாக இந்த மின்சார ரயில் வேலூர் கன்டோன்மென்டில் இருந்து புறப்பட்டுச் சென்று, இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை அடையும்.

திங்கள்கிழமை (ஜனவரி 21 ) அதிகாலை 4 மணிக்கு இந்த சிறப்பு ரயில் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 6 மணியளவில் வேலூர் கன்டோன்மென்டை அடையும். பிறகு அங்கிருந்து புறப்படும் இந்த ரயில், சென்னை கடற்கரையைக் காலை 9.30 மணிக்கு வந்தடையும் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க