172-வது தியாகராஜர் ஆராதனை விழா ஜனவரி 21-ல் தொடங்குகிறது!  | thiruvaiyaru thyagaraja aradhana festival

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (19/01/2019)

கடைசி தொடர்பு:18:40 (19/01/2019)

172-வது தியாகராஜர் ஆராதனை விழா ஜனவரி 21-ல் தொடங்குகிறது! 

ங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவர்  ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள். இவருடைய 172-வது ஆராதனை விழா  வரும் ஜனவரி 21-ம் தேதி தொடங்க உள்ளது. 

தியாகராஜர் ஆராதனை

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் வாழ்ந்தவர் தியாகராஜ சுவாமிகள்.  தனது வாழ்நாளில் ராம பக்தியையே பிரதானமாகக் கொண்டு சாகாவரம் பெற்ற பல கீர்த்தனைகளை இயற்றிப் பெரும் புகழ்பெற்றவர். இவரது ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் தைமாத பகுள பஞ்சமி அன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழா இந்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி தொடங்கி தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபெற உள்ளது. 

வரும் 21.1.19 திங்கள் அன்று  மாலை ஐந்து மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. இந்த விழாவை, பத்மபூஷண் டி.வி.கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, சபா அறங்காவலர் குழுத் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  நாடுமுழுவதும் இருந்து இசைக் கலைஞர்கள் பங்கேற்று, சிறப்பிக்க உள்ளனர். 

இசைக்கலைஞர்கள்

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பகுளபஞ்சமி தினமான ஜனவரி 25-ம் தேதி அன்று, சுவாமிகளின் அதிஷ்ட்டானத்தில் இசைக்கலைஞர்கள் இணைந்து கர்நாடக இசை உலகின் கடவுளாக விளங்கும் தியாகராஜ சுவாமிகளுக்கு  பஞ்சரத்தின கீர்த்தனைகளை இசைத்து, ஆராதனை செய்யவுள்ளனர்.  இந்த வைபவத்தில் கலந்துகொண்டு இசை ஆராதனை செய்வதை இசைக்கலைஞர்கள் தங்கள் வாழ்நாள் பாக்கியமாகக் கருதுகின்றனர்.  பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடப் பாடக்  குரலின் வளமும், சாகித்தியம் பெருகும்  என்பது ஐதீகம்.