வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு! | Thaipusam festival held in vadapalani temple

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (21/01/2019)

கடைசி தொடர்பு:23:30 (21/01/2019)

வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு!

ன்று தைப்பூசப் பெருவிழா. உலகெங்கும் உள்ள அனைத்து ஆலயங்களிலும் தை மாத பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில் முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.     

முருகன்

சென்னை, வடபழநியில் உள்ள தண்டாயுதபாணி  திருக்கோயிலிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு இன்று காலை முதலே ஆலயத்தில் மூலவருக்குச்  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு  இறைவனை தரிசித்து வருகின்றனர். 

முருகன்


ஆண்டுதோறும் முருகனுக்கு வேண்டிக்கொண்டு காவடி, பால்குடம், அலகு குத்துதல் மற்றும் பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்துபவர்களும் விரதம் இருந்து பக்தியோடு அதை நிறைவேற்றி வருகின்றனர். ' வெற்றிவேல்  முருகனுக்கு அரோகரா ' 'வீர வேல் முருகனுக்கு அரோகரா' என்ற கோஷம் கோயிலைச் சுற்றி ஒலித்த வண்ணம் உள்ளது. திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று மாலை முருகக் கடவுள் வள்ளி , தேவசேனா சமேதராக திருவீதி உலா எழுந்தருள்வார்.  திரளான பக்தர்களின் வருகையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறையினர் செய்துள்ளனர்.

தைப்பூசம் படங்களைப் பார்க்க   இங்கே கிளிக் செய்யவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க