111 வயதான மஹான் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சிவகுமார ஸ்வாமிகள் காலமானார்! | sivami sri sri sivakumara swamigal

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (22/01/2019)

கடைசி தொடர்பு:12:30 (22/01/2019)

111 வயதான மஹான் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சிவகுமார ஸ்வாமிகள் காலமானார்!

கர்நாடகாவைச் சேர்ந்த 111 வயதான சித்தகங்கா ஆசிரம மடாதிபதி, ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சிவகுமார ஸ்வாமிகள் நேற்று ஸித்தியடைந்தார்

1907 ம் ஆண்டு வீரப்புரா என்னும் கிராமத்தில் பிறந்த சிவகுமார சுவாமிகள் 1930 ம் ஆண்டில் மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். கர்நாடகாவில் ஆன்மிக விழிப்பு உணர்வும் சமூக விழிப்பு உணர்வும் ஏற்பட அரும்பாடுபட்டார்.

மஹான்

ஒரு நாளில் 3 மணி நேரம் மட்டுமே தூங்கும் வழக்கமுடைய சுவாமிஜி, கன்னடம் மற்றும் வடமொழியில் புலமை பெற்றவர். தனது வாழ்வில் பெரும்பான்மைக் காலத்தைக் கல்விப் பணிக்காகவே செலவிட்டவர். 

1965 ம் ஆண்டில் கர்நாடகப் பல்கலைக்கழகம் இலக்கியத்துக்கான கௌரவ முனைவர் பட்டத்தையும் 2007 ம் ஆண்டு கர்நாடக அரசு வழங்கும் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருதையும் பெற்றவர். 2015 ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கி கவுரவித்தது.

கடந்த ஓரிரு மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த சிவகுமார சுவாமிகள் நேற்று இறைவனடி சேர்ந்தார். இவருடைய மறைவுக்குப்  பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் `சுவாமிகள் ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழ்மையில் வாடிய மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். மேலும் பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் மதத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமிகளின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.  கர்நாடக அரசு மூன்று நாள்கள் துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்துள்ளது. இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

PC : commons.wikimedia.org/wiki/KNM

நீங்க எப்படி பீல் பண்றீங்க