`வீட்டில் இருந்தபடியே போப்புடன் பிரார்த்தனை செய்யலாம்!'- புதிய செயலியை வெளியிட்டது வாடிகன் | A New Apps helps pray with pop

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (22/01/2019)

கடைசி தொடர்பு:15:52 (22/01/2019)

`வீட்டில் இருந்தபடியே போப்புடன் பிரார்த்தனை செய்யலாம்!'- புதிய செயலியை வெளியிட்டது வாடிகன்

பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போப் ஆண்டவர்,  'க்ளிக் டு பிரே ' என்னும் மொபைல் செயலியைத் தொடங்கிவைத்தார். போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், உலக அமைதி மற்றும் இயற்கைப் பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்றவேண்டி நேற்று பிரார்த்தனைசெய்தார்.

செயலி


அப்போது அவர் பேசுகையில், “கொலம்பியா மற்றும் மத்திய தரைக்கடல் பிரச்னைகள் தொடர்பாக  என் மனதில் வலி ஏற்பட்டுள்ளது. லிபியா மற்றும் மொராகோ நாடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், பிழைப்புக்காக வேலை தேடி  படகில் சென்றபோது மத்திய தரைக்கடலில் மூழ்கினர். அவர்களில் 170 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்.

அதேபோல, கொலம்பியாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். பலர்  காயம் அடைந்தனர். அவர்களுக்காகவும், உலகில் அமைதி நிலவவேண்டியும் பிரார்த்தனை செய்வோம்” என்றார்.  இந்த நிகழ்ச்சியின்போது, பிரார்த்தனைக்காக ‘டேப்லெட்’டில் ‘க்ளிக் டு பிரே’ (clicktopray) என்ற புதிய செயலியை போப் ஆண்டவர் தொடங்கிவைத்தார்.

ச்ஹுர்ச்ஹ்

இந்தச் செயலிமூலம் வீட்டில் அமர்ந்தபடியே போப் ஆண்டவருடன் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட முடியும். 
இதுகுறித்து  வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  (https://www.clicktopray.org/en/user/popefrancis) என்ற இணையதள முகவரியில் தொடர்புகொண்டால், போப் ஆண்டவருடன் பிரார்த்தனையில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரார்த்தனை மற்றும் செயலி தொடங்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.