'தீதினை அகற்றித் திருவாக்கும்' திருநீலகண்ட நாயனார் குருபூஜை | Short news about thiruneelaganda nayanar gurupooja

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:07:00 (29/01/2019)

'தீதினை அகற்றித் திருவாக்கும்' திருநீலகண்ட நாயனார் குருபூஜை

சைவ சமயத்தின் 63 நாயன்மார்களுள் ஒருவர் திருநீலகண்ட நாயனார். குயவர் குலத்தில் அவதரித்து, சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர். அவரது குருபூஜை தினம் ஒவ்வொரு வருடமும் தை மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், மகா தீபாராதனை, அபிஷேகம் ஆகியவை நடைபெற உள்ளன. 

தில்லை நடராஜர் கோயில்

சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு  சிதம்பரத்தில்  அவதரித்தார் திருநீலகண்டர். சிவபெருமானின் அதிதீவிர பக்தரான இவர், தில்லை நடராஜரைத் தினமும் வழிபட்டு, சிவனடியார்களுக்கு இலவசமாகத் திருவோடு செய்துகொடுத்தும்,  திருவோடுகளில் அமுது படைத்தும் தொண்டுசெய்வதையே வழக்கமாகக்கொண்டிருந்தார். அதுவே தனது வாழ்க்கை நெறியென்று வாழ்ந்துவந்தார். ஒரு முறை திருநீலகண்டரின் துணைவியார், வாக்குவாதத்தின் காரணமாக ‘நீலகண்டரின் மேல் ஆணையாகக் கூறுகிறேன். இனி என்னைத் தாங்கள் தீண்டக் கூடாது’ என்று கூறிவிடுவார். சிவபெருமான்மீது தனது  மனைவி ஆணையிட்டதால், அந்த நெறியைக் கடைப்பிடித்து, தன் மனைவியைத் தொடாமலேயே வாழ்ந்து, சிவத்தொண்டு செய்துவந்தார். அதற்குப் பிறகு, சிவபெருமானின் திருவிளையாடலால் முதுமை நீங்கி இளமையை அடைந்து, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.

திருநீலகண்ட நாயனார்

திருநீலகண்டரின் சிவத் தொண்டைப் பற்றி திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனாரும், பெரிய புராணத்தில் சேக்கிழாரும் புகழ்ந்திருக்கிறார்கள். குலாலர் எனப்படும் குயவர் இன மக்களுக்கு திருநீலகண்டர்தான் குலகுருவாக விளங்குகிறார். சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோயில், பாபநாசம் பாபவிநாசர், அவிநாசி சந்திரசேகர் கோயில், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில்  அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை தினத்தில், அவரது சிவ பக்தியையும், சிவத் தொண்டையும் நினைவுகூர்வோம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க