சபரிமலை கோயில் சீரமைப்புக்கு பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு! | 100 crore rupees alloted kerala govt. for sabarimalai renovation work

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (01/02/2019)

கடைசி தொடர்பு:16:45 (01/02/2019)

சபரிமலை கோயில் சீரமைப்புக்கு பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு!

பரிமலை கோயில் சீரமைப்புக்காக ரூ.100 கோடி நிதியை இந்த ஆண்டு பட்ஜெட்டில் கேரள மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சபரிமலை

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடும் மழை பெய்தது. இதனால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. பெருமளவில் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இந்தப் பாதிப்பு காரணமாக அம்மாநில அரசுக்கு பெரும் நிதிச் சுமை ஏற்பட்டது.

சபரிமலை

இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் நிதி உதவி அளித்தன. அதேபோல சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள ஆன்மிக அமைப்புகளும், பிற அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்றன. 

iyyapaஇதனால் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. அத்துடன் வருவாயும் குறையத் தொடங்கியது. மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த கோயிலும் சீரமைக்கப்படவில்லை. இதற்குப் பெருமளவில் நிதி தேவைப்பட்டது. 

ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, கோயில் வளர்ச்சிப் பணிகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்குமாறு மாநில அரசிடம் கோரியிருந்தது.

இந்நிலையில், நேற்று கேரள சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர், பக்தர்களின் காணிக்கை குறைவாக வருவதால் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.