ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் மாசி மகம் பெருந்திருவிழா - 9 -ம் தேதி தொடக்கம்! | masi festival kick starts in Aadhi Kumbeshwarar temple from February 9

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (05/02/2019)

கடைசி தொடர்பு:20:15 (05/02/2019)

ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் மாசி மகம் பெருந்திருவிழா - 9 -ம் தேதி தொடக்கம்!

அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழா - 9 -ம் தேதி தொடக்கம்

கோயில் நகரமாம் கும்பகோணத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில், ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் மாசி மகம் பெருவிழா, வரும் 9.2.19 அன்று தொடங்கி, பத்து நாள்கள் நடைபெறும்.

மாசி மகம்


பிரளயத்தில், அமுதம் தாங்கி வந்த கும்பத்தை இறைவன் அம்பெய்தி, அதிலிருந்த அமுதத்தை வெளிப்படுத்தியது, மாசி மக நட்சத்திர நாளில்தான். அமுத குடத்திலிருந்து தோன்றிய லிங்கேஸ்வரரே ஆதி கும்பேஸ்வரர்.  அமுதத்தில் இருந்து தோன்றியதால் அவருக்கு  'அமுதீசர்' என்ற பெயரும் ஏற்பட்டது. அமுதம் வெளிப்பட்ட மாசி மகம் நன்னாளை முன்னிட்டு, அங்கு பத்து நாள் உற்சவம் நடத்தப்படும். இந்த ஆண்டு மாசிமகப் பெருவிழா உற்சவம், 9.2.19 தொடங்கி 22.2.19 வரை நடைபெற உள்ளது.

 

ஆதிகும்பேஸ்வரர்

9.2.19 அன்று மாலை விநாயகர் உற்சவமும், மறுநாள் 10.2.19 அன்று கொடியேற்றத்துடனும் விழா தொடங்குகிறது. 12.2.19 அன்று அறுபத்து மூவர் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல் விழாவும், 14.2.19 அன்று தன்னைத் தானே பூஜித்தல் விழாவும், ஓலைச் சப்பரத்தில் எழுந்தருளலும், சுவாமியும் தாயாரும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளலும் நிகழும். விழாவின் 10 -ம் நாளான 19.2.19 அன்று பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி உற்சவம் காலை 12-க்குமேல் 1.00 மணிக்குள் மகாமகக் குளத்தில் நடைபெறும்.  

பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு, ஆதி கும்பேஸ்வரரின் அருளுக்குப் பாத்திரமாகும்படி கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க