நாளை ராகு-கேது பெயர்ச்சி - கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள்! | tomorrow special pooja at keelaperumpallam

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (12/02/2019)

கடைசி தொடர்பு:13:50 (12/02/2019)

நாளை ராகு-கேது பெயர்ச்சி - கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள்!

நாளை 13.2.19 அன்று நடைபெற உள்ள ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு கேது பகவானுக்கு கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 

ராகு கேது

நவகிரகப் பெயர்ச்சிகளில் சனி. ராகு -கேது, மற்றும் குருப்பெயர்ச்சிகள் முக்கியம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.  ராகு -கேது கிரகங்கள் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். இந்த இரு கிரகங்களுக்கும் ராசிக் கட்டத்தில் சொந்த வீடு என்பது கிடையாது. ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை ராசிச் சக்கரத்தில் பின்னோக்கி நகரும் இந்தக் கிரகங்கள் அமரும் இடத்தைவைத்து சில பலாபலன்களை ஒவ்வொரு ராசிக்கும் வழங்குவர்.  

தற்போது நடைபெற உள்ள ராகு - கேது பெயர்ச்சியில் ராகு கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும், கேது மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைய உள்ளனர். இந்தப் பெயர்ச்சி நாளை (13.2.19)  பகல் 2.04 மணிக்கு நடைபெற உள்ளது. நாளை தொடங்கி அடுத்து 31.8.2020 வரை இரு கிரகங்களும் இந்த இடத்திலேயே இருந்து பலன் அளிப்பர். 

நவகிரகம்

 

இதை முன்னிட்டு கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கேது ஆலயத்தில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற உள்ளன. கேது பகவான் ஞானத்துக்கும், மோட்சத்துக்கும் அதிபதியானவர். கேது பகவானை ஞாயிற்றுக் கிழமைகளில் எமகண்டத்தில் வழிபட்டால் மிகவும் சிறப்பானது. இன்றும் நாளையும் நாகநாதசுவாமி ஆலயத்தில் சிறப்பு பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை பெயர்ச்சி நேரத்தில் சிறப்பு மகாதீபாராதனையும் காட்டப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.