நாளை ராகு - கேது பெயர்ச்சி! - கோயில்களில் பரிகார பூஜைகள் | rahu - ketu peyarchi and parikara pooja

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (12/02/2019)

கடைசி தொடர்பு:16:43 (12/02/2019)

நாளை ராகு - கேது பெயர்ச்சி! - கோயில்களில் பரிகார பூஜைகள்

வகிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் அதாவது நிழல் கிரகங்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நவகிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உள்ள ஏழு கிரகங்களுக்கு ராசிக் கட்டத்தில் ஆட்சி வீடு எனப்படும் சொந்த வீடு உள்ளது. ஆனால், ராகுவுக்கும் கேதுவுக்கும் சொந்த வீடு இல்லை. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் எந்த ராசியில் இருக்கிறார்களோ அந்த ராசிக்கு உரியக் கிரகத்தின் பலன்களைத் தருவார்கள். கோசாரத்தின்படி பார்த்தால், ராகு சனியைப் போன்றும் கேது செவ்வாயைப் போன்றும் பலன் தருவார்கள். ராகு மற்றும் கேது ஆகியோர் ஒரு ராசியில் சுமார் ஒன்றரை வருடங்கள் அதாவது 18 மாதங்கள் இருப்பார்கள். குறிப்பாக, மற்ற கிரகங்கள் முன்னோக்கிச் செல்லும்போது, ராகுவும் கேதுவும் பின்னோக்கிச் செல்வார்கள். தற்போது மகரத்தில் இருக்கும் கேது தனுசு ராசிக்கும் கடகத்தில் இருக்கும் ராகு மிதுன ராசிக்கும் நாளை பிற்பகல் 2.04 மணிக்குப் பெயர்ச்சி அடைகிறார்கள். நாளை முதல் 31.8.20 வரை அந்த ராசிகளிலேயே இருந்து பலன்களைத் தரவிருக்கிறார்கள்.

ராகு கேது

அதை முன்னிட்டு ராகு, கேது பரிகாரத் தலங்களான திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் மற்றும் பல சிவ தலங்களில் ராகு, கேது பரிகார பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற இருக்கின்றன. 

ஒருவரின் ராசிக்கு ராகு 3, 6, 10, 11 ஆகிய இடங்களிலும் கேது 3, 6, 11 ஆகிய இடங்களிலும் கோசாரத்தில் வரும்போது நற்பலன்களைத் தருவார்கள். இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்காரரும் கோயில்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு கெடுபலன்கள் குறைந்து நன்மைகள் பெறலாம். துர்கை வழிபாட்டின் மூலம் ராகுவையும் விநாயகர் வழிபாட்டின் மூலம் கேதுவையும் ப்ரீதி செய்யலாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க