ராகு, கேது பெயர்ச்சியின் பொதுப் பலன்கள்! | Ragu and kedhu transition 's general benefits

வெளியிடப்பட்ட நேரம்: 14:08 (13/02/2019)

கடைசி தொடர்பு:10:55 (14/02/2019)

ராகு, கேது பெயர்ச்சியின் பொதுப் பலன்கள்!

நிகழும் விளம்பி வருடம் மாசி மாதம் 1 - ம் தேதி புதன்கிழமை, இன்று (13-2-2019) மதியம் மணி 1.25-க்கு ரிஷப லக்னத்தில் சாயா கிரகங்களென வர்ணிக்கப்படும் சர்ப்ப கிரகங்களாகிய ராகுவும், கேதுவும் இடம்பெயர்ந்தனர். கருநாகமெனும் ராகு, சர வீடான கடக ராசியிலிருந்து உபய வீடான மிதுன ராசியிலும்... செந்நாகமெனும் கேது, சர வீடான மகர ராசியிலிருந்து உபய வீடான தனுசு ராசியிலும் நுழைகிறார்கள்.  31.08.2020 வரை இங்கிருந்து தங்களின் அதிகாரத்தைச் செலுத்துவர். 

ராகு

ராகு, கேதுவின் கோள்சார தசா புத்திப் பலன்களைப் பற்றி பேசாத ஜோதிட நூல்களே இல்லை எனலாம். அதில், 'சந்திரகலாநாடி' என்கிற 'தேவகேரசம்' எனும் சமஸ்கிருத ஜோதிட நூலில்தான் ராகு, கேதுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நிழல் கிரகங்களால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது.  'நாடி சங்கிரஹா' எனும் நூலில், சூரியனுடன் ராகு இருந்தால் தந்தைக்கு ஆகாது என்றும் அற்குப் பரிகாரமாக சூரியபகவானை வழிபட்டு, வெள்ளியால் செய்த ஏழு நாகங்களுக்குப் பசும்பாலால் அபிஷேகம் செய்து, 11 நாள்கள் வணங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ராகு பகவான் மிதுனத்தில் அமர்கிறார். 

 

 

காலபுருஷ கணிதத்தின்படி, மிதுனம் மூன்றாமிடம் என்பதால், ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால்... அவர் கருத்துக்கு மாற்றாகப் பலர் பல கருத்துகளைச் சொல்லுவார். நான்கு பேர் ஒருவரைப் பாராட்டினால், 40 பேர் அவரை விமர்சனம் செய்வார்கள். இந்தப் பெயர்ச்சியால் மக்களிடையே சின்னச்சின்ன சந்தோஷத்தில் நாட்டம் அதிகமாகும். பொறுமை குறையும். மக்களிடையே சகிப்புத் தன்மையைக் குறைக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க