திருமலை திருப்பதியில் ரதசப்தமி விழா கோலாகலம்! #Tirupati | Radha Sabthamy festival celebrated in Tirumala Tirupati

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (13/02/2019)

கடைசி தொடர்பு:17:50 (13/02/2019)

திருமலை திருப்பதியில் ரதசப்தமி விழா கோலாகலம்! #Tirupati

திருமலை திருப்பதியில் நேற்று (12-ம் தேதி) ரத சப்தமி விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. திருமலையில் நடைபெற்ற இந்த விழாவில் வேங்கடேச பெருமாள் சூரிய பிரபை, சின்னசேஷன், கருடாழ்வார், அனுமன், கற்பகவிருட்சம், சர்வ பூபாளம், சந்திர பிரபை ஆகிய  ஏழு வாகனங்களில் வீதி உலா வந்தார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி 

ரத சப்தமி விழாவை `உப பிரம்மோற்சவம்' என்றே அழைக்கிறார்கள். சூரியனை ஆராதிக்கும் இந்தத் திருநாளில் சூரிய பகவானின் அதிதேவனான நாராயணனும் கொண்டாடப்படுகிறார். அதனால்தான் திருமலை திருப்பதியில் இந்த நாளில் 'ஒரு நாள் பிரமோற்சவ விழா' நடத்தப்படுகிறது. புரட்டாசி பிரம்மோற்சவத்தைக் காணத் தவறியவர்களுக்கு இந்த ஒரு நாள் பிரம்மோற்சவ நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதமாகும்.

ஆண்டுக்கொரு முறை வரும் இந்த விழாவுக்கென திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை, கேசரி, உப்புமா போன்ற உணவு வகைகள் வழங்கப்பட்டன.

ரத சப்தமி விழா படங்களைக் கான இந்த லிங்க்கில் க்ளிக் செய்யவும். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க