ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா தொடங்கியது! | Aatrukkal bagavathy amman koil pongal festival

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (13/02/2019)

கடைசி தொடர்பு:18:59 (13/02/2019)

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா தொடங்கியது!

பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் திருவிழா விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நேற்று (பிப்ரவரி 12) தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  21-ம் தேதி வரை 10 நாள்கள் விழா நடக்கிறது.

கேரள மாநிலம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நேற்று தொடங்கியது. திருவனந்தபுரம் அருகே பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

 அம்மன்

இந்த ஆண்டு பொங்கல் விழா நேற்று (பிப்ரவரி 12) தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 21-ம் தேதி வரை 10 நாள்கள் விழா நடக்கிறது. இதையொட்டி தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  

முக்கிய நிகழ்வான 'பொங்கல்' விழாவுக்காக பிப்ரவரி 20-ம் தேதி காலை 10.15 மணிக்கு அடுப்பு பற்றவைக்கப்படும். அப்போது கோயிலைச்  சுற்றிலும்  லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடுவர். பிற்பகல் 2.15 மணிக்கு பொங்கல் நைவேத்யம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கேரளம் தவிர தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொள்வார்கள்.

அம்மன்

இக் கோயிலின் பொங்கல் விழா கடந்த 2009-ம் ஆண்டு கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. அப்போது 25 லட்சம் பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கலிட்டனர். கடந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர். இந்த ஆண்டு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும், கின்னஸ் நிறுவனத்தினர் வருவார்கள் என கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.