மேஷ ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள்! | Rahu kedhu transition's benefits for Mesham

வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (14/02/2019)

கடைசி தொடர்பு:19:14 (14/02/2019)

மேஷ ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள்!

எப்போதும் எதையும் வித்தியாசமாகவும் புரட்சிகரமாகவும் செய்திடும் மேஷ ராசிக்காரர்களுக்கு இதுவரை நான்காமிடத்தில் இருந்து உங்களை அலைக்கழித்து  வந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு மூன்றாமிடம் செல்கிறார். இனி உங்களின் காட்டில் பணம் மழையாகக் கொட்டும். இதுவரை தடங்கலாகி வந்த காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேறும். உடல்நலமில்லாமல் இருந்த தாயாரின் உடல்நலம் சீரடையும். 

ராகு

நான்காமிடத்திலிருந்த ராகுவால், சொந்த வீடு வாங்க முடியாமல், சிறிய வீட்டில் நெருக்கடியான சூழ்நிலையில் வசித்து வந்தீர்கள். இனி புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். 

பத்தாமிடத்திலிருந்த கேது, எந்தப் பணியையும் செய்யவிடாமல், தடுமாற்றத்தையும், தயக்கத்தையும், வீண் குழப்பத்தையும், பழியையும் தந்து கொண்டிருந்தார். இப்போது அவர் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்கிறார். இனி உங்களின் புதிய முயற்சிகள் வெற்றியாகும். அரைகுறையாக நின்றுவிட்ட பல வேலைகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தராதவர்கள் இப்போது தானாக முன்வந்து திருப்பித் தருவார்கள். 

மேஷம்

தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, தீர்வு கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த உங்களுக்கு நல்ல தீர்வைத் தருவதாகவும், உங்களைச் சாதிக்க வைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅகத்தீஸ்வரரை ஏதேனும் ஒரு பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். தாயை இழந்தவர்க்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close