சிம்ம ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்! | Ragu kedhu transition's benefits for Leo

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (19/02/2019)

கடைசி தொடர்பு:19:10 (19/02/2019)

சிம்ம ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்!

எப்போதும் புன்னகையுடன் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த ராகு, கேது பெயர்ச்சி, 13.2.19 முதல் 31.8.20 வரையிலும் எண்ணற்ற மாற்றங்களை அருளப்போகிறது. இதுவரை உங்களின் ராசிக்குப் பன்னிரண்டில் இருந்த ராகு, இப்போது ராசிக்கு லாப வீடான பதினொன்றாம் வீட்டுக்கு வருகிறார். 

ராகு

'3, 6, 11 - ம் வீட்டில் ராகு பகவான் இருந்தால், 'அன்னதானம்' 'சொர்ணதானம்' செய்யுமளவுக்கு பணம் வரும்' எனப் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன. எடுத்த காரியத்தில் எல்லாம் தடைகள் வந்துகொண்டிருந்த நிலை மாறும். 

புத்துணர்ச்சியும் புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்துமுடிப்பீர்கள். சேமிக்கும் அளவு பணவரவு அதிகரிக்கும். 

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருந்த கேது பகவான், இப்போது பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் உங்கள் புகழ் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் உங்களுக்கான பங்கை கேட்டுப் பெறுவீர்கள்.

 

 

 

உங்கள் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்வீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி திடீர் யோகத்தை அளிப்பதாகவும் அமையும். 


பரிகாரம்: 
தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு வனதுர்க்கையை ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். தடைகள் உடைபடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close