துலாம் ராசிக்காரர்களுக்கான ராகு கேதுப் பெயர்ச்சிப் பலன்கள்! #Video | Ragu and Kedhu transition's benefits for Libra

வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (21/02/2019)

கடைசி தொடர்பு:18:03 (21/02/2019)

துலாம் ராசிக்காரர்களுக்கான ராகு கேதுப் பெயர்ச்சிப் பலன்கள்! #Video

சமாதானத்தையும் நீதியையும் நேர்மையையும் விரும்பக்கூடியவர்கள், துலாம் ராசிக்காரர்கள். உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். உங்களின் ராசிக்கு 13.2.2019 முதல் 31.08.2020 வரை ராகு, கேது சஞ்சாரம் செய்து பலன் தரப் போகிறது. 
இதுவரை உங்களின் ராசிக்கு 4 - ம் வீட்டில் கேது பகவான் இருந்து நிம்மதியாகத் தூங்கவிடாமல், சாப்பிடவிடாமல் உங்களைத் துரத்தி அடித்தவர், இப்போது மூன்றாவது வீட்டில் அமர்ந்து சுப பலன்களைத் தரப் போகிறார்.

ராகு கேது

உங்கள் ராசிக்கு 10 - ம் வீட்டிலிருந்து உங்களை ஒரு வேலையையும் செய்யவிடாமல் முடக்கிப் போட்ட ராகு பகவான் இப்போது 9 - ம் வீட்டில் அமர்வதால் சோம்பல் நீங்கும். இதுவரை முடிக்கப்படாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை, இனி முழுமூச்சுடன் முடித்துக்காட்டுவீர்கள். வாழ்க்கை இனி பிரகாசிக்கும். 

குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் நீங்கி சந்தோஷம் குடிகொள்ளும். உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும். தடைப்பட்ட கல்வியைத் தொடர்வீர்கள். தாயுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

 

வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். வாடகை வீட்டிலிருந்தவர்கள் சொந்த வீட்டுக்கு மாறுவார்கள். சிலர் கூடுதலாக அறைகள் கட்டுவார்கள். ஏற்கெனவே வாங்கிப்போட்டிருந்த காலிமனையில் புதிதாக வீடு கட்டுவார்கள். அதற்குரிய வங்கிக் கடனுதவி தடையின்றி கிடைக்கும். 
இந்த ராகு கேதுப் பெயர்ச்சி அலுத்துக்கொண்டிருந்த உங்களை ஆனந்தப்பட வைக்கும். 

பரிகாரம்:
கோயம்புத்தூர் மாவட்டம், தர்மலிங்கம் மலை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீதர்மலிங்கேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close