விருச்சிக ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்! #Video | Raahu Kedhu transition's benefits for Scorpio

வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (22/02/2019)

கடைசி தொடர்பு:18:36 (22/02/2019)

விருச்சிக ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்! #Video

 மனத்தில்பட்டதை வெளிப்படையாகப் பேசும் சுபாவம்கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு 13.2.2019 முதல் 31.8.2020 வரை உள்ள காலகட்டத்தில் ராகு கேது சஞ்சாரம் வித்தியாசமான பலன்களைத் தரப்போகிறது.

ராகு

 

உங்கள் ராசிக்கு 9 - வீட்டிலிருந்து கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதபடி செய்ததுடன், வருமானத்துக்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான் இப்போது 8 - ம் வீட்டில் சென்று மறைகிறார். பலவிதங்களிலும் சிரமப்பட்ட நீங்கள், இனி ஓரளவு நிம்மதியடைவீர்கள்.

சிலரின் ஆலோசனையைக் கேட்டுத் தவறான பாதையில் சென்று பலவிதங்களிலும் சிக்கித் தவித்தீர்களே, இனி சரியான பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். பாதியிலேயே தடைப்பட்டுப் போன வேலைகளையெல்லாம் இனி பரபரப்புடன் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் முகம் பளிச்சிடும். 

 

 

இது நாள் வரை தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கொடுத்துவந்த கேது பகவான் இப்போது ராசிக்கு 2 - ம் வீட்டில் நுழைகிறார். இனி சாதுரியமான பேச்சால் சாதிப்பீர்கள். இரண்டாமிடம் தனம் குடும்பம் வாக்கு ஆகியவற்றுக்கு காரகத்துவமாக சில நேரங்களில் அந்தப் பேச்சாலேயே பிரச்னைகளிலும், வீண் வம்புகளிலும் சிக்கிக் கொள்வீர்கள். வெளியிடங்களில் முடிந்தவரை வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கப் பாருங்கள்.

பரிகாரம்:

தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீமாரியம்மனை ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் சென்று வணங்குங்கள். கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள். வெற்றிகள் தொடரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close