திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் மார்ச் 1-ல் தொடக்கம்! | bramotsavam at thiruputkuli vijayaraghava perumal temple

வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (26/02/2019)

கடைசி தொடர்பு:19:51 (26/02/2019)

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் மார்ச் 1-ல் தொடக்கம்!

திருப்புட்குழி, மரகதவல்லித் தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகின்றன.

பிரம்மோற்சவம்

108 திவ்யதேசங்களில் ஒன்று திருப்புட்குழி. ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்வதைக் கண்ட ஜடாயு அவனோடு போரிட்டார். ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். இதனால் ஜடாயு உயிரிழந்தார். அவருக்கு ராமச்சந்திரமூர்த்தி இறுதிச் சடங்குகளைச் செய்து மோட்சமளித்தார். ஜடாயுவுக்கு மோட்சமருளிய தலம் திருப்புட்குழி என்று சொல்லப்படுகிறது. இங்கு ஜடாயுவுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. இங்கிருக்கும் தீர்த்தம் ஜடாரித் தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.

இத்தகைய புராணச் சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் இருக்கும் விஜயராகவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத் திருவிழா வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 10-ம் தேதிவரை நடைபெறுகிறது. 1.3.2019 அன்று காலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் கொடியேற்றத்துடன்  உற்சவம் தொடங்கும். 3.3.2019 அன்று தங்க கருட சேவையும் 6.3.2019 அன்று யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளலும் நடைபெறும். உற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேர் 7.3.2019 அன்று நடைபெறுகிறது. 9.3.2019 அன்று பல்லக்குத் தீர்த்தவாரி நடைபெறும். 10.3.2019 அன்று கொடியிறக்கத்துடன் உற்சவம் நிறைவடையும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close