சின்னமலையனூரில் மார்ச் 4-ம் தேதி மயானக்கொள்ளை மாசிப் பெருவிழா! | sinna malaiyanur mayana kollai held on march 4

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (02/03/2019)

கடைசி தொடர்பு:18:10 (02/03/2019)

சின்னமலையனூரில் மார்ச் 4-ம் தேதி மயானக்கொள்ளை மாசிப் பெருவிழா!

சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் அமைந்திருக்கும் சின்ன மலையனூர் ஸ்ரீபாலாடை அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் 108-ம் ஆண்டு மயானக்கொள்ளை மாசிப் பெருந்திருவிழா வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. 

மயானக்கொள்ளை

சென்னை திருவல்லிக்கேணிப் பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணாம்பேட்டை சின்னமலையனூர் அருள்மிகு ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம். நூற்றாண்டுப் பழைமை கொண்ட இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை மாசித்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.

திருவல்லிக்கேணியில் வசித்த கிருஷ்ணப்பர் என்பவர் கனவில் எழுந்தருளிய மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் அவர் வசிக்கும் பகுதியிலேயே, தான் கோயில் கொள்ளப்போவதாக வாக்கருளினாள். இதையடுத்து, மேல்மலையனூருக்குச் சென்ற கிருஷ்ணப்பர், அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் உள்ள புற்றில் இருந்து மண் எடுத்து வந்து அம்மன் சிலை செய்து, குடிசை அமைத்து அதில் அம்மனை எழுந்தருளச் செய்தார். எனவே, இந்த ஆலயம் சின்ன மலையனூர் எனப்படுகிறது.

மயானக்கொள்ளை

இந்தக் கோயிலின் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, காஞ்சி மகாபெரியவரால் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது புதிதாக சொர்ணத்தில் ஸ்ரீசக்ர யந்திரம் மற்றும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி மூல யந்திரம் செய்து, அவற்றை 51 சக்தி பீடங்களுக்கு கொண்டு சென்று பூஜித்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். 

இத்தகைய பெருமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மயானக் கொள்ளை மாசிப் பெருவிழா இந்த ஆண்டு மார்ச் 4 -ம் தேதி தொடங்குகிறது. 4.3.19 அன்று விநாயகர் பூஜையும், 5.3.19 அன்று காலை 1008 பால்குடப் புறப்பாடும் நடைபெறும். 5.3.19 அன்று இரவு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளும் கயிலாய வாத்திய இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

மறுநாள் 6.3.19 அன்று பகல் 1.35க்கு மயான சூறைக்கு அன்னை சிம்மவாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து வரும் மார்ச் 15 வரை மாசித் திருவிழா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close