சென்னையில் நாட்டியாஞ்சலி... போரூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயிலில் மகாசிவராத்திரி வைபவம் | Porur sree ramachandra nattiyanjali function

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (04/03/2019)

கடைசி தொடர்பு:13:15 (04/03/2019)

சென்னையில் நாட்டியாஞ்சலி... போரூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயிலில் மகாசிவராத்திரி வைபவம்

சென்னை போரூர் ராமநாதீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. இதில்  சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டியாஞ்சலி

சென்னையை அடுத்துள்ள போரூரில் அமைந்துள்ளது ராமநாதீஸ்வரர் திருக்கோயில். ராமன் சிவபெருமானை வழிபட்ட தலம் என்று நம்பப்படுகிறது.  பழைமையான இந்த ஆலயத்தில் சோழ மன்னர்கள் திருப்பணி செய்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன. மேலும், இந்த ஆலயத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரர் சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தனை பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் மகாசிவராத்திரிப் பெருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக இந்த ஆலயத்தில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. சென்னையில் அமைந்திருக்கும் 15-க்கும் மேற்பட்ட நாட்டியப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்துகொண்டு இரவு முழுவதும் நாட்டியம் ஆடி இறைவனை ஆராதனை செய்வர்.

ராமநாதீஸ்வரர் கோயில்

இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு 9-வது ஆண்டாக நாட்டியாஞ்சலிப் பெருவிழா நடைபெற உள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டு நாட்டியத்தின் வாயிலாக இறைவனுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.  மேலும், நான்கு கால அபிஷேக ஆராதனைகளும் சிறப்பாக நடைபெற உள்ளன. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் தொடங்கிவைக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close