``சென்னையில் கயிலாய தரிசனம்!” - பிரம்மகுமாரிகள் அமைப்பின் பிரமாண்ட ஏற்பாடு | Kayilaya Dharshan on maha shivarathri festival

வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (04/03/2019)

கடைசி தொடர்பு:13:34 (04/03/2019)

``சென்னையில் கயிலாய தரிசனம்!” - பிரம்மகுமாரிகள் அமைப்பின் பிரமாண்ட ஏற்பாடு

சென்னை வள்ளுவர்கோட்டத்தில், மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில்  `திருக்கயிலாய - மானசரோவர் தத்ரூப தரிசனம்' என்னும் நிகழ்ச்சி 2.3.19 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்துவருகின்றனர்.

மகாசிவராத்திரி

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு திருக்கயிலாயம் - மானசரோவர் தத்ரூப தரிசனம் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. 1937-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரம்மகுமாரிகள் அமைப்பு உலகம் முழுவதும் தன் கிளைகளைப் பரப்பி ஆன்மிக சேவை புரிந்துவருகிறது. உலக அமைதிக்கான இந்த அமைப்பின் சேவைகளைப் பாராட்டி ஐ.நா. 7 முறை `அமைதித் தூதுவர்' விருதை வழங்கியுள்ளது. இந்த அமைப்பு அவ்வப்போது உலகமெங்கும் ஆன்மிகம் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவது வழக்கம்.

சென்னையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கடந்த 2-ம் தேதி இந்த இயக்கம் ஓர் ஆன்மிகக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதில் திருக்கயிலாயம் மற்றும் மானசரோவர் ஏரியின் மாதிரி வடிவங்கள் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அமைதியான அந்த சூழலும் பின்னணியில் ஒலிக்கும் நமச்சிவாய நாமமும் காண்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்துகிறது.

பிரம்ம குமாரிகள்

கண்காட்சியில் தியானத்தின் மூலம் இறைவனை தரிசிக்கும் வழிகள் குறித்த விளக்கப் படங்களும், காணொலிகளும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள 'வேல்யூ ட்ரீ ' என்னும் பகுதியை மக்கள் விரும்பிப் பார்வையிடுகின்றனர். ஒரு மரத்தின் படம் வரையப்பட்டுள்ளது. அதில் ஒட்டும் வகையில் பல இலைகள் வைத்திருக்கிறார்கள். அந்த இலைகள் ஒவ்வொன்றிலும் நாம் தவிர்க்க வேண்டிய அல்லது கடைப்பிடிக்க வேண்டிய வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இலையை எடுத்து மரத்தில் ஒட்டுபவர்கள் அதில் இருக்கும் சொல்லினை வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அதன் குறிக்கோள். அநேகர் இதில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். மேலும் மதுப் பழக்கத்திலிருந்து விடுபடும் வழிகளை விளக்கும் ஓர் அரங்கும் அமைந்துள்ளது.

நாளை 5.3.19 அன்று முடிவடைய இருக்கும் இந்தக் கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்துவருகின்றனர். இன்று சிவராத்திரியை முன்னிட்டு பெருந்திரளாக மக்கள் வந்து கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close