திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவம் - 11 ம் தேதி தொடக்கம் | Brahmotsavam starts in thiruvanmiyur temple

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (06/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (06/03/2019)

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவம் - 11 ம் தேதி தொடக்கம்

திருவான்மியூர் அன்னை திரிபுரசுந்தரி உடனமர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் பங்குனிப் பெருவிழா (பிரம்மோற்சவம்) வரும் 11.3.19 தொடங்கி 21.3.19 வரை நடைபெறவுள்ளது. 

பிரம்மோற்சவம்

தொண்டை மண்டலத்தின் பதினெட்டுத் தலங்களுள் மயிலைக்கு அடுத்து திருவான்மியூரே சிறப்புபெற்றது. இங்குதான் ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம். தேவாரத்தில் திருநாவுக்கரசப் பெருமான் இந்தத் தலத்து இறைவனை `வான்மியூர் ஈசனே' என்று போற்றிப்பாடியுள்ளார். அகத்தியருக்கும் வால்மீகி முனிவருக்கும் இறைவன் இந்தத் தலத்தில் காட்சிகொடுத்ததாகத் தலபுராணம் சொல்கிறது. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சிகொடுத்த நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

பிரம்மோற்சவம்

இந்த ஆண்டு பங்குனிமாத பிரம்மோற்சவம் வரும் 11.3.19 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உற்சவ நாள்களில் தியாகராஜப் பெருமான் புறப்பாடு தினமும் ஒரு வாகனத்தில் திருவீதி உலா எழுந்தருள்வார். விழாவின் முக்கிய நிகழ்வுகளான பரிவேட்டை 18.3.19 அன்றும், அகத்தியருக்குத் திருக்காட்சி அளித்த வைபவம் 19.3.19 அன்றும் நடைபெறும். 21.3.19 அன்று தெப்பத்திருவிழாவோடு இந்த உற்சவம் நிறைவடையும்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close