குண்டமிறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்... குமாரபாளையம் காளியம்மன் கோயில் திருவிழா | Namakkal kumarapalaiyam kaliyamman temple festival

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (07/03/2019)

கடைசி தொடர்பு:20:20 (07/03/2019)

குண்டமிறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்... குமாரபாளையம் காளியம்மன் கோயில் திருவிழா

குமாரபாளையம் காளியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக, நேற்று  (6.3.19)  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டமிறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளியம்மன் கோயில், 133 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயில் திருவிழாவில், பக்தர்கள் அக்னி குண்டமிறங்கும் நிகழ்ச்சி புகழ்பெற்றது. 

காளியம்மன் கோயில் திருவிழா

இந்தக் கோயிலில், கடந்த மாதம்  19-ம் தேதி திருவிழா தொடங்கியது. இதனையொட்டி, நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவந்தன. நேற்று 6.3.19 அன்று பிரமாண்ட குண்டமிறங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் முன்பு குண்டம் தோண்டப்பட்டது. சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் வருடா வருடம் கலந்துகொள்வர். நேற்று அதிகாலையில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, தங்களுடைய நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.  இந்த நிகழ்ச்சி முடிந்ததும், தோண்டப்பட்ட இடத்தில் மஞ்சள் மற்றும் குங்குமம் தூவி அக்னி சாந்தப்படுத்தப்பட்டது. 

குண்டம் இறங்குவதற்கு முன்பாக, ஏராளமானோர் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். அம்மனுக்கு அனைத்து சமூகத்தினரும் பொங்கலிட்டு வழிபாடு செய்வது இந்தக் கோயிலின் சிறப்பு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close