பவானி செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா - விநோதமான சேற்றுப் பண்டிகை கோலாகலம்! | bhavani chelliyaandi amman villi festival

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (07/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (07/03/2019)

பவானி செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா - விநோதமான சேற்றுப் பண்டிகை கோலாகலம்!

பவானியில் இருக்கும் செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழாவில் சேற்றுப் பண்டிகை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 
கடந்த 6.3.19 அன்று பவானி செல்லியாண்டி அம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சேற்றுப் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று பக்தர்கள் உடலெங்கும் சேற்றினைப் பூசிக்கொண்டு ஊர்வலமாக வருவர். 

சேற்றுப் பண்டிகை

இதற்காகச் சேற்றினை உருவாக்கத் தண்ணீரினை லாரியில் கொண்டுவந்து சாலைகளில் கொட்டியபடியே செல்வர். தண்ணீர் மண்ணோடு சேர்ந்து சேறும் சகதியுமாக மாறும். அந்தச் சேற்றினை உடலெங்கும் பூசிக்கொள்வர். ஒரு சிலர் ராமன், ராவணன் என வேஷம் கட்டிக்கொண்டும் வந்து சேற்றில் ஆடுவர். அப்போது பக்தர்கள் ஆடுகிறவர்கள் மேல் உப்பும் மிளகும் தூவுவர்.

அம்மன்

அம்மனின் நகை மற்றும் புடவைகளை ஒரு பழக்கூடையில் வைத்துத் தலையில் ஏந்தி வரும் பூசாரிக்கு பாதபூஜை செய்து அவரோடு வந்த குதிரையைத் தொட்டு வணங்கி பக்தர்கள் ஆசி பெற்றனர். 

செல்லியாண்டி

அன்று மாலையில் அம்மனுக்கு வேண்டுதல் செய்த, ஆண்களும் பெண்களும் அலகு குத்தும் சடங்கும் நடைபெற்றது.

 பவானி

திருவிழாவின் தொடக்க நாளான கடந்த மாதம் 26-ம் தேதி நடப்பட்ட கம்பமானது மஞ்சள் நீராட்டலுக்குப் பின்பு பிடுங்கி காவிரி ஆற்றில் விடப்பட்டு விழா நிறைவுபெற்றது. .  


[X] Close

[X] Close