சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் தங்கத்திலான புதிய கதவு - காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்! | New sabarimala ayyappan temple door

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (08/03/2019)

கடைசி தொடர்பு:14:20 (08/03/2019)

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் தங்கத்திலான புதிய கதவு - காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்!

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலிலுள்ள கருவறையில் இருக்கும் கதவில் விரிசல் ஏற்பட்டதால், தங்கத்திலான புதிய கதவு பொருத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐயப்பன்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறையிலுள்ள கதவு தேக்கினால் ஆனது. இந்தக் கதவில் தாமிர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, இதன் மீது 4 கிலோ எடையிலான தங்கத் தகடும் வேயப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கதவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தக் கதவைச் சரிசெய்யும் முயற்சியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

ஐயப்பன்

இதற்கிடையில் விரிசல் ஏற்பட்ட கதவுக்கு பதிலாக புதிய கதவைப் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கதவை உன்னி நம்பூதிரி தலைமையிலான பக்தர்கள் குழுவினர் காணிக்கையாக அளிக்கவுள்ளனர். இதற்காக சில நாள்களுக்கு முன் தேவபிரசன்னமும் பார்க்கப்பட்டது. தற்போது பொருத்தப்பட உள்ள புதிய கதவு எலம்பள்ளி தர்மசாஸ்தா கோயிலில் உள்ளது. இந்தக் கதவு வரும் ஞாயிறு (10.3.19) அன்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பின்னர் கோயில் சந்நிதானத்தில் வைக்கப்படும். பின்னர், புதிய கதவை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் பெற்றுக்கொள்வார்கள். 

சபரிமலை ஐயப்பன்  கோயில்

இந்நிலையில், மாதாந்திர பூஜையையொட்டி வரும் திங்கள் (11.3.19) அன்று, ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாக, புதிய கதவு பொருத்தப்படும். பின்னர் வருகிற 21-ம் தேதி மீண்டும் நடை சாத்தப்படும். 
 


[X] Close

[X] Close