வருடாந்திர உற்சவத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று  நடை திறப்பு | Sabarimala Ayyappan temple open for annual festival

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (11/03/2019)

கடைசி தொடர்பு:14:15 (11/03/2019)

வருடாந்திர உற்சவத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று  நடை திறப்பு

கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் வருடாந்திர உற்சவத்தையொட்டி இன்று நடை திறக்கப்படவுள்ளது.

ஐயப்பன்

சபரிமலையில் வருடாந்திர உற்சவம் இன்று (11/03/2019) தொடங்கி வருகிற 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வருடாந்திர உற்சவத்தையொட்டி சபரிமலையில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் நடை திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கோயிலின் நடை திறக்கப்படும்போது கருவறை வாயிலில் புதிதாக 4 கிலோ எடையிலான தங்கத் தகடுகளுடன் கூடிய கதவுகள் பொருத்தப்படவுள்ளன. முன்னதாக இருந்த கதவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, சரிசெய்யும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டிருந்தது. தற்போதுள்ள புதிய கதவானது உறுதியான தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. இதில் தங்கத்திலான தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய கதவை உன்னி நம்பூதிரி தலைமையிலான பக்தர்கள் குழுவினர் ஏற்கெனவே காணிக்கையாக அளித்திருந்தனர். இதற்காக தேவபிரசன்னமும் பார்க்கப்பட்டது. 

சபரிமலை

ஐயப்பன் கோயிலில் இன்று தொடங்கும் வருடாந்திர உற்சவமானது வரும் 21-ம் தேதி முடிவடையும். அன்று மீண்டும் சந்நிதான நடை சாத்தப்படும். 


[X] Close

[X] Close