மகான் ஶ்ரீராகவேந்திரரின் 424-வது ஜயந்தி விழா... மந்திராலயத்தில் கோலாகலம் | raghavendra swamigal 424 th jayanthi festival

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (13/03/2019)

கடைசி தொடர்பு:13:00 (13/03/2019)

மகான் ஶ்ரீராகவேந்திரரின் 424-வது ஜயந்தி விழா... மந்திராலயத்தில் கோலாகலம்

மந்திராலயத்தில் பிருந்தாவனம் கொண்டிருக்கும் மகான் ஶ்ரீ ராகவேந்திரரின்  424-வது ஜயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மகான்

1595 - ம் ஆண்டு, தமிழகத்தில் புவனகிரி என்னும் ஊரில் அவதரித்தார்.  சங்குகர்ணன் என்ற தேவனே சாபத்தின் காரணமாக, பூவுலகில் பிரகலாதனாக, வியாசராயராக, ராகவேந்திரராக அவதரித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இளம் வயதிலேயே சகல வித்தைகளையும் கற்றுத்தேர்ந்த ராகவேந்திரர், மத்வ மடத்தின் தலைவராக ஆனார். ஏராளமான மக்களை ஆன்மிக வழியில் நடத்தினார். இன்றும் அவர் மந்திராலயத்தில் இருக்கும் பிருந்தாவனத்தில் தனது சூட்சும சரீரத்தோடு வாழ்ந்து, மக்களுக்கு அருள்பாலிப்பதாக அவரது பக்தர்கள் நம்புகிறார்கள்.

ராகவேந்திர சுவாமிகளின் 424-வது ஜயந்தி விழாவான இன்று, மந்திராலயம் ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மடத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஆராதனைகளும் மடத்தின் சார்பில் நடத்தப்பட்டுவருகின்றன. கடந்த 8.3.19 அன்று, பாதுகா பட்டாபிஷேகத்தோடு தொடங்கிய இந்த குரு வைப உற்சவம், இன்று ஜயந்தி விழா கொண்டாட்டங்களோடு நிறைவுபெறுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு ஆராதனைகள், நடனம், யட்ச கானம் முதலிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மகான்

மந்திராலயம் மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள ராகவேந்திர சுவாமிகளின் ஆலயங்களில் பக்தர்கள் சிறப்பு ஆராதனைகளை மேற்கொண்டுவருகின்றனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close