திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விரைவில் வெளியாக உள்ளது, `பத்மாவதி அம்மவாரு' செயலி! | This story about `Padmavathi Ammavaru' apps

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (13/03/2019)

கடைசி தொடர்பு:14:50 (13/03/2019)

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விரைவில் வெளியாக உள்ளது, `பத்மாவதி அம்மவாரு' செயலி!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், விரைவில் `பத்மாவதி அம்மவாரு' என்ற புதிய செயலி விரைவில் அறிமுகமாக உள்ளது.

பத்மாவதி தாயார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் அருகிலுள்ள தோட்டத்தில், தாயாரின் அவதாரம் குறித்த விளக்கப்படங்கள் தற்போது வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களின்மூலம், தாயாரின் அவதாரம்குறித்த புராணத் தகவல்களைப் பக்தர்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இந்த விளக்கப் படங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி லட்சுமிகாந்தம்  சமீபத்தில் திறந்துவைத்தார். இந்தப் படங்கள், விரைவில் செயலி வடிவத்துக்கு மாறும் எனத் தெரிவித்தார்.

இந்தச் செயலிக்கு, `பத்மாவதி அம்மவாரு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் செயலியை பக்தர்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செயலியில், தாயாரின் புகைப்படங்களைத் தொட்டால், அந்தப் படங்கள்குறித்த தகவல்களை அறியலாம். மேலும், கோயில் மண்டபத்திலுள்ள சிலைகள்குறித்த விவரங்களையும் எளிதாக அறிந்துகொள்ள முடியும். `பத்மாவதி அம்மவாரு' செயலி, விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாயார்

மக்களின் பயன்பாட்டுக்காக ஏராளமான செயலிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.  ஆன்மிகம் சார்ந்த செயலிகள், பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், விரைவில் வெளிவர இருக்கும்  'பத்மாவதி அம்மாவாரு' செயலி மக்களிடையே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


[X] Close

[X] Close